சிஎஸ்கேவுக்கு அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார்; இனி கவலையே வேணாம் – வாசிம் அக்ரம்!

0
8747

ஜடேஜாவை கேப்டன் ஆக்கிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. இப்போது வேறு ஒருவர் கிடைத்துவிட்டார். அவரை கேப்டனாக்கிப் பாருங்கள் நல்ல முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனியின் இறுதி காலம் என்று அவரே கூறிவிட்டார். அனேகமாக இதுதான் கடைசி காலகட்டம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. அது உண்மை எனும் பட்சத்தில் யார் புதிய கேப்டனாக வரவேண்டும்? யார் வந்தால் சரியாக இருக்கும்? என்பது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நிலவி வருகிறது.

- Advertisement -

கடந்த சீசனில் அணியின் மூத்த வீரராக இருக்கும் ஜடேஜாவை தோனி மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கேப்டன் ஆக்கி பார்த்தது எடுபடவில்லை. இந்நிலையில் வரும் வருடம் இவர் கேப்டனாக வந்தால் சரியாக இருக்கும் என்று சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் பாகிஸ்தான் லெஜன்ட் வாசிம் அக்ரம். அவர் பேசியதாவது

“கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டன் ஆக்கிப் பார்த்தார்கள். ஆனால் அது அணிக்கும் சரியாக வரவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டத்திற்கும் சரியாக அமையவில்லை. இன்னிலையில் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்துவது சரியான முடிவாக இருக்காது. ஆகையால் உள்ளூர் வீரர்களையே பயன்படுத்துவது சரியாக இருக்கும்.

அவர்களுக்கு தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பற்றிய புரிதல் தெளிவாக இருக்கும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இலகுவாக இருக்கும். அந்த வகையில் ரகானே சிஎஸ்கே அணியின் சூழலுக்கு சரியான வீரராக இருப்பார். அனியின் பயிற்சியாளராக இருந்து வரும் பிளம்மிங் நன்றாக பார்த்துக் கொள்கிறார். நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆகையால் ரகானேவை அடுத்த கேப்டனாக பயன்படுத்தலாம். ஒருவேளை தோனி இந்த சீசனுடன் சென்றுவிட்டால்.” என்று பேசியுள்ளார் வாசிம் அக்ரம்.

- Advertisement -