17 வது ஐபிஎல் சீசன் வருகிற 22 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது இதன் தொடக்க நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்படு வரும் நிலையில், முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.
இத்தொடருக்கான முழு அட்டவணை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடக்க இருக்கின்ற லோக் சபா தேர்தலின் காரணமாக முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணையை மட்டுமே வெளியிட்டுள்ளது பிசிசிஐ. மேலும் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு இரண்டாம் கட்டமாக மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி கிட்டத்தட்ட தனது கடைசி சீசனில் விளையாடப் போகிறார் என்றே கூறலாம். இதனால் சென்னை மைதானத்தில் தோனி விளையாடும் ஒவ்வொரு போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதனை விண்ணப்பிக்கவும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஐந்து பட்டங்களை பெற்றுள்ள சென்னை அணி ஆறாவது பட்டத்தை கடைசி சீசனில் விளையாடப் போகும் தோனிக்காக வெல்ல முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் சென்னை அணி விளையாட உள்ள முதல் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிஎஸ்கே போட்டிகளின் அட்டவணை: மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் சென்னை அணி மோத உள்ளது. இதற்குப் பின்னர் மார்ச் 26 ஆம் தேதி இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிறகு மார்ச் 31ஆம் தேதி டெல்லி கேப்பிடல் அணியை விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. இதற்குப் பின்னர் ஏப்ரல் ஐந்தாம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சந்திக்க உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2024.. சிஎஸ்கே வீரர்களின் சம்பள பட்டியல்.. தோனியை தாண்டிய 3 வீரர்கள்
இப்போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கி இருக்கிறது. இரண்டாம் கால அட்டவணை இன்னும் சிறிது நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனவே மற்ற அணிகளுடன் மோத உள்ள சென்னை அணி வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 சீசனுக்கான சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி(c), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிம்செல்ட் சான்ட்னர், சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.