ஐபிஎல் 2025.. எம்எஸ் தோனியை இம்பாக்ட் பிளேயரா யூஸ் பண்ண போறீங்களா.? சிஎஸ்கே கேப்டனின் சுவாரசிய பதில்

0
246

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று இரவு நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் இறங்க தயாராக உள்ளன.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மகேந்திர சிங் தோனி குறித்த சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே மும்பை மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணிக்கு பேட்டிங்கில் அதிக நேரம் நிலைத்து நின்று விளையாடுவதில்லை. கடைசி இரண்டு ஓவர்களுக்கு முன்னதாக களம் இறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார் என்பதன் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு தோனி மிகவும் பிட் ஆகி வலைப்பயிற்சியில் சிறப்பாக சிக்சர்கள் அடித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் தோனிக்கு தற்போது 43 வயதாவதால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடைசியில் களமிறங்கி சில பந்துகளை எதிர் கொண்டு விளையாடுவாரா? அல்லது மிடில் பிரசில் களமிறங்கி விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில் தோனியை சிஎஸ்கே அணியில் இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தவும் வாயிப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

தோனி இம்பாக்ட் பிளேயர்

இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் களம் இறங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த போட்டி மிகவும் முக்கியமாக கருதப்படுவதால் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் விறுவிறுப்பாக போட்டியிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழ்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எம்எஸ் தோனி இம்பாக்ட் பிளேயர் ஆக பயன்படுத்துவீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதையும் படிங்க:ஐபிஎல்லில் இதான் பிரச்சனை.. கூடவே இருந்து ரகசியம் தெரிஞ்சுட்டு இப்போ தோற்கடிச்சுட்டாரு – கேகேஆர் கேப்டன்

இதுக்கு அவர் பதில் கூறியபோது “தோனியை இந்த வருடம் இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்துவீர்களா? என்று கேட்கிறீர்கள். ஐயா, அவர் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வீரர். ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கும் போது நிறைய உத்வேகத்தை தருகிறது. எனவே 43 வயதில் அவர் என்ன செய்கிறாரோ அது நிச்சயமாக குறிப்பிடத்தக்கதாகும். எனவே இந்த ஆண்டு தோனி தன்னால் முடிந்தவரை சிறப்பாக பங்களிக்க விரும்புவார்” என்று பேசியிருக்கிறார். இதன் மூலமாக தோனியை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தப் போவதில்லை என்பது இவரது கருத்தின் மூலம் தெரிகிறது.

- Advertisement -