சிஎஸ்கே அணிக்கு அடி மேல் அடி! விரலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல்-இல் இருந்து சிஎஸ்கே வீரர் விலகல்!

0
969

சிஎஸ்கே வீரர் சிசான்டா மகாலா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விரலில் காயம் ஏற்பட்டதால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைல் ஜெமிஷன் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாட முடியாது என்று உறுதியானது. ஆகையால் அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிசான்டா மகாலா எடுத்துவரப்பட்டார்.

- Advertisement -

சர்வதேச போட்டிகள் முடிந்து கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி சிஎஸ்கே அணியுடன் இணைந்த மகாலா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இரண்டு ஓவர்கள் இவருக்கு சரியாக அமையவில்லை. இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசி ஆச்சரியப்படுத்தினார். பேட்டிகளும் நல்ல பங்களிப்பை கொடுக்கக்கூடியவர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இடம்பெற்று விளையாடி இரண்டு ஓவர்கள் வீசினார். இவர் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் அடித்த பந்தை கேட்ச் எடுத்தார். அப்போது இவரது விரலில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதன்படி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு இவரால் கிரிக்கெட் போட்டிகள் விளையாட முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அணிக்குள் இணைந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்பது சற்று வருத்தம் அளிக்கக்கூடிய தகவலாக இருக்கிறது.

ஏற்கனவே காலில் காயம் காரணமாக, பென் ஸ்டோக்ஸ் சில போட்டிகள் விளையாட முடியாமல் இருக்கிறார். இப்போது மகாலா விளையாடாமல் இருப்பது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்திருக்கிறது.