சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணும் கிரிக்கெட்டரா? எந்த அணிக்காக விளையாடுகிறார்? ஆச்சரியமான தகவல்கள்!

0
1660
Ruturaj

ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராகக் குறைந்த காலத்தில் இந்திய இளம் வீரர் ருதுராஜ் உருவாகி இருக்கிறார்!

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரராக வருவதற்கான நம்பிக்கை அளிக்கக்கூடிய எதிர்கால வீரராகவும் இருக்கிறார்!

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் நான்கு அரைசதங்களுடன் 490 ரன்களை 147 ஸ்ட்ரைக்ரேட்டில் 42 ஆவரேஜில் எடுத்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வெல்வதற்கு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் சீரான பங்களிப்பை தந்தது முக்கியமான காரணமாக இருக்கிறது.

வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஸ்டாண்ட் பை வீரராக ருத்ராஜ் இடம்பெற்று இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஜூன் முதல் வாரம் மூன்றாம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் அவரது திருமணம் நடைபெற இருப்பதால் அவர் விலகிக்கொள்ள அவரது இடத்தில் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து சென்றிருக்கிறார்.

தற்பொழுது ருதுராஜ் திருமணம் திருமணம் செய்யவிருக்கின்ற மணப்பெண்ணும் கிரிக்கெட் வீராங்கனை என்கின்ற செய்தி சமூக வலைதளத்தில் மிகவும் ஆச்சரியமானதாகப் பகிரப்பட்டு வருகிறது. அவரும் ருதுராஜ் போலவே மகாராஷ்டிரா மாநில அணிக்காகவே விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது முழு பெயர் உத்கர்ஷா அமர் பவார். 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் துணை நகரில் பிறந்த இவர், சிறுவயதில் ஃபுட்பால் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

பின்பு தனது பதினோராவது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து மகாராஷ்டிரா மாநில அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று விளையாடி வருகிறார். கணவன் மனைவி இருவரும் கிரிக்கெட்டர் என்பதும், இருவரும் ஒரே மாநில அணிக்கு விளையாடுகிறார்கள் என்பதும் சுவாரசியமான ஒன்று!