18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் லீக் தொடரின் 62வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
இதில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது நடைபெற்று வரும் டெல்லி மைதானத்தில் ஒன்பது வருடங்கள் கழித்து சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சென்னை ராஜஸ்தான் போட்டி
இந்த போட்டியை பொறுத்தவரை டாஸ் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இதன்படி சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ் அனுபவ வீரர் டெவான் கான்வே மற்றும் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களம் இறங்கி விளையாடினார்கள். இதில் இளம் வீரன் ஆயுஷ் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க கான்வே 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய உர்வில் பட்டேல் டக் அவுட் ஆகி வெளியேற, அஸ்வின் 13 ரன்னில் நடையை கட்டினார்.
பின்னர் களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா தனது ஐந்தாவது பந்தில் யுத்விர் சிங் பந்துவீச்சில் ஜூரேலிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். இதன் மூலமாக டெல்லி மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா கடந்த 9 வருடங்களாக வைத்திருந்த பெருமை முடிவுக்கு வந்தது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 9 வருடங்களாக நாட் அவுட் லிஸ்டில் விளையாடி வந்திருக்கிறார்.
ஜடேஜாவுக்கு நேர்ந்த சோகம்
அதாவது ஜடேஜா மொத்தமாக 19, 28, 27, 7, 22, 20 என ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகாமல் நாட் அவுட் லிஸ்டில் ரவீந்திர ஜடேஜா இருந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு ரன் எடுத்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக கடந்த 9 வருடங்களாக கிடைத்து வைத்திருந்த பெருமை இந்த போட்டியின் மூலமாக முடிவுக்கு வந்தது. மேலும் தொடக்க வீரர் மாத்ரே 43 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, பின்னர் களம் இறங்கிய பிரெவிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:ஒரே சீசனில் இத்தனை முறை டக் அவுட்டா.? எந்த அணியுமே செய்யாத சாதனை படைத்த சிஎஸ்கே.. சோகத்தில் ரசிகர்கள்
25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் அவர் 42 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, பிறகு களம் இறங்கிய சிவம்தூபே தனது பங்குக்கு 32 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக யுத்விர் சிங் 4 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தற்போது வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறது.






