சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் சிஎஸ்கே வீரரான நூர் அகமது சிறப்பாக விளையாடி 3 விக்கட்டுகள் கைப்பற்றியதோடு ஊதா நிற தொப்பியை தற்போது வென்று இருக்கிறார்.
சிஎஸ்கே ஆர்சிபி மோதல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் முக்கிய துருப்பு சீட்டான நூர் அகமது உள்ளே வந்து தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கால் பில் சால்டை வெளியேற்றினார். மேலும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி 30 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது தனது கியரை மாற்றி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 12வது ஓவரை மீண்டும் நூர் அகமது வீச, இரண்டாவது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி சச்சின் ரவீந்திரவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஊதா தொப்பியை கைப்பற்றிய சிஎஸ்கே வீரர்
அதுவே ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அதிரடி ஆட்டக்காரரான மிடில் வரிசை பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் 15வது ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்சர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சித்தார். ஆனால் அடுத்த பந்தியிலேயே அவரை போல்டு முறையில் வெளியேற்றி இந்தப் போட்டியில் 3 விக்கட்டுகள் மொத்தமாக கைப்பற்றினார். மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:அழுத்தமான சூழ்நிலையில் நன்றாக விளையாட.. இந்த விஷயமே காரணம்.. என் பலமும் அதுதான் – அசுதோஷ் ஷர்மா பேட்டி
ஏற்கனவே மும்பை அணிக்கு எதிராக 4 விக்கெடுகள் கைப்பற்றிய நூர் அகமது இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி மொத்தமாக 7 விக்கெடுகள் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலமாக ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றிய லக்னோ அணி வீரர் சர்துல் தாக்கூர் வசம் இருந்த ஊதா நிறத் தொப்பி தற்போது சிஎஸ்கே வீரர் வசம் வந்திருக்கிறது.






