இந்திய கிரிக்கெட்

2026 ஐபிஎல்.. சிஎஸ்கேவில் இருந்து விலகிய முக்கிய வீரர்.. மிகப்பெரிய பின்னடைவு – என்ன நடந்தது?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவர் காயத்தின் காரணமாக விலகியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே அணி கடந்தாண்டு புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மிக மோசமான ஆண்டாக சென்ற ஆண்டு பதிவானது. இதனால் மினி ஏலத்தின் மீண்டும் சிஎஸ்கே அணி சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் பிரச்சனை

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணியில் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக காணப்படுகிறது. இந்திய வீரர்கள் அனைவருமே சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டில் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் வெளிநாட்டு வீரரான டிவால்ட் ப்ரிவிஸ் சிறந்த பார்மில் இருக்கிறார்.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணியின் பௌலிங் யூனிட் கொஞ்சம் பலவீனமாக காணப்படுகிறது. அந்த அணிக்கு கடைசி கட்ட ஓவர்களை வீசுவதற்கு இரண்டு சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

- Advertisement -

வெளியேறிய வீரர்

தற்போது சிஎஸ்கே அணிக்கு கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு நம்பிக்கையான பவுலராக இருந்து வந்த நாதன் எல்லீஸ் காயத்திற்கு காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறி உள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க : நான் இப்ப குடிக்கிறதை முழுசா நிறுத்திட்டேன்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – சாஹல் பேட்டி

இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு தற்போது டெத் பவுலர்கள் யாருமே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே பவுலிங் யூனிட் மிக பலவீனமாக மாறி உள்ளது. இதனால் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது இந்த முறையும் கடினம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -
Published by