நான் இப்ப குடிக்கிறதை முழுசா நிறுத்திட்டேன்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – சாஹல் பேட்டி

0
6
Chahal

இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தான் குடிப்பழக்கத்தை ஆறு மாதத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டதாக ஆச்சரியப்படும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது இந்திய அணியில் எந்த வடிவத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. ஏறக்குறைய இவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்.

- Advertisement -

வினோதமான முடிவு

யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சு திறமை சர்வதேச அளவுக்கு இப்போதும் இருந்து வருகிறது. அவர் நீக்கப்பட்ட பொழுதும் கூட அவர் மிகவும் தரமான பந்துவீச்சாளராக இருந்தார். உலகில் வேறு எங்கு இருந்திருந்தாலும் அவர் அந்த அணியில் இடம் பெற்று இருப்பார். மேலும் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக இருந்திருப்பார்.

இந்திய கிரிக்கெட்டில் குல்தீப் யாதவுக்கு மட்டுமே இடமிருந்தது. இதைத்தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வந்ததும் பேக்கப் பவுலராகவும் சாஹல் இடம் பெறுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன்

இதுகுறித்து சாஹல் பேசும்போது “இந்த ஆண்டு முதல் எனது உடலை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என என்னுடைய மனம் சொல்லி இருக்கிறது. இத்துடன் நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். நான் தற்போது குடிப்பதை நிறுத்தி விட்டேன்”

இதையும் படிங்க: கடந்த சீசனில் கோலி இந்த உண்மையை தெளிவா உணர்ந்து இருப்பாரு.. 17 சீசனா இல்லாத விஷயம் அது – டிவில்லியர்ஸ் கருத்து

“குடிப்பதை நிறுத்தி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது என்னுடைய வயது 35 ஆகிறது. நான் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவதோடு அணிக்கு 150 சதவீதம் பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். ஒரு மூத்த பந்துவீச்சாளராக நான் ஐபிஎல் தொடருக்கு சென்றால் இளம் வீரர்கள் என்னை பார்த்து ” இவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம்” என்று நினைக்க வேண்டும். எனவே ஆல்கஹால் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்து விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -