ஆர்சிபில 2 பேர தூக்கிட்டா.. நாங்க சும்மா ஜெயிப்போம் – சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

0
189
Virat

இன்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே நடக்க இருக்கும் முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணி எந்த இரண்டு ஆர்சிபி வீரர்களை வீழ்த்தினால் எளிமையாக வெல்ல முடியும் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் மோதிய தங்களது கடைசி போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில், சிஎஸ்கே அணி ஆர்சிபி அணி இடம் தோல்வி அடைந்த காரணத்தினால் அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தாறுமாறாக ஏறி இருக்கும் எதிர்பார்ப்பு

இதன் காரணமாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட தற்பொழுது சிஎஸ்கே ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இரு அணி ரசிகர்களுக்கும் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இத்தோடு சமூக வலைதளங்களில் இரண்டு ரசிகர்களும் மோதிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி தங்கள் சொந்த மைதானத்தில் இந்த போட்டியில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு வீரர்கள் முக்கியமானவர்கள்

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் பேசும்பொழுது “எங்கள் அணியின் பதிரனா தற்பொழுது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். எனவே நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்”

இதையும் படிங்க : ஒரு சீசன்ல 1000 ரன் அடிப்பாங்களா.. அபிஷேக் ஹெட்டை நம்பி நாங்க இருக்கோமா? – கிளாசன் பேச்சு

“ஒரே ஒரு போட்டி முடிந்திருக்கும் நிலையில் யாரைப் பற்றி கருத்து கூறுவதும் மிகவும் கடினமாகும். கடந்த ஆண்டு இருந்த இந்த இரண்டு அணிகளுமே வேறுபட்டவை. கடந்த ஆண்டில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் பார்க்க விரும்பவில்லை. எல்லா ஐபிஎல் அணிகளை போலவே ஆர்சிபி அணியும் வலிமையாக இருக்கிறது. இது இந்த தொடரை அழகாக மாற்றுகிறது. மேலும் ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதாரை அமைதியாக வைத்திருக்க முடிந்தால் எங்களால் சுலபமாக வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -