சிஎஸ்கே அணி தற்போது விளையாடியிருக்கும் 10 போட்டியில் ஒரு முக்கியமான இடத்தில் மிக மோசமான முறையில் விளையாடியிருக்கிறது. இந்த புள்ளி விபரங்களை தற்போது சிஎஸ்கே ரசிகர்களே கடுமையான முறையில் விமர்சித்து வருகிறார்கள்.
நேற்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் பேட்டிங்கில் ஆரம்பித்தது. 220 ரன்கள் எடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். இப்படியான நிலையில் சாகலின் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை கொடுத்து 190 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகி வெறுப்பேற்றியது.
சிஎஸ்கேவின் புத்திசாலித்தனமற்ற செயல்
நேற்று இறுதிக்கட்டத்தில் ஸ்பின்னர் ஒரு ஓவர் வீச வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி இருந்தது. இந்த நிலையில் களத்தில் தொடர்ந்து சிவம் துபே நின்று கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடி வந்த 88 ரன்கள் எடுத்திருந்த சாம் கரன் 18ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் 19வது ஓவருக்கு ஸ்பின்னர் சாகலை கொண்டு வந்தார்.
சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர் களை அடிப்பதற்காகவே சிவம் துபேவை வைத்திருக்கிறார்கள். எனவே அந்த ஓவரில் குறைந்தபட்சம் ஒரு மூன்று சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆடுகளமும் சாதகமாகவே இருந்தது. ஆனால் அந்த ஓவரில் ஒரு பந்தை கூட சிவம் துபே சந்திக்க முடியவில்லை. தீபக் ஹூடா தேவையில்லாமல் இரண்டு ரன் எடுத்து, சிவம் துபே அந்த ஓவரில் மூன்று பந்துகள் சந்திக்க இருந்த சூழ்நிலையைக் கெடுத்தார். இந்த அளவிற்கு சிஎஸ்கே அணி புத்திசாலித்தனம் இல்லாமல் தொடர்ந்து விளையாடுகிறது.
60 ஓவரில் ஆறே முறை
மேலும் சிஎஸ்கே அணி இதுவரை மொத்தம் பத்துப் போட்டிகளில் பவர் பிளேவில் 60 ஓவர்கள் விளையாடி இருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த 60 ஓவர்களிலும் சேர்த்து சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக பவர் பிளேவில் 6 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறது. அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் 27 சிக்ஸர்களுக்கு மேல் அடித்திருக்கிறது.
இதையும் படிங்க : 16வது சம்பவம்.. சிஎஸ்கேவிடம் மும்பையை தாண்டி கெத்து காட்டும் பஞ்சாப்.. ஆச்சரியப்பட வைக்கும் புள்ளி விபரங்கள்
அதாவது சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு ஒரு சிக்சர் என்கின்ற கணக்கில் அடித்திருக்கிறது. இரண்டு பீல்டர்கள் மட்டும் வெளியில் இருக்கும் நிலையில் கடினமான புதிய பந்தில் எளிதாக சித்தர்கள் அடிக்க முடியும். ஆனால் சிஎஸ்கே பழைய முறையில் கிரிக்கெட் விளையாடி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த புள்ளிவிபரத்தை வைத்து சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.






