“வி லவ் யூ சான்ட்னர்” – மிட்சல் சான்ட்னரின் செயலுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் சிஎஸ்கே ரசிகர்கள்!

0
2477
Santner

ஐபிஎல் அணி நிர்வாகங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை ஒரு குடும்பம் என்பதாக எல்லோரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு அணிக்குள் வரும் வீரர்களிடையே ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும்!

இந்த வகையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இடதுகை சுழற் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர் ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு வீரராகவே இருக்கிறார்!

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இதற்கு அடுத்து கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தின் 1.90 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஆறு வருடங்களாக அணியில் தொடரும் இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018 மற்றும் 2021 இரண்டு வருடங்களிலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.

மேலும் நான்கு ஆண்டுகளில் சேர்த்து மொத்தமாக இவருக்கு 15 போட்டிகளில் தான் விளையாட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. அந்த 15 போட்டிகளிலும் 6.88 என்ற மிகச் சிறப்பான எக்கானமியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் குஜராத், லக்னோ மும்பை அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு தரப்பட்டது. இந்த மூன்று போட்டிகளிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எக்கானமியை 6.75 என்று மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்.

மும்பை அணிக்கு எதிராக வான்கடேவில் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால் அணிக்கு தீக்ஷனா திரும்ப இவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியில் இடதுகை சுழற் பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா இருப்பதால், கூடுதலாக இவரையும் வைக்க முடியவில்லை.

இப்படி வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படும் இவர், வாய்ப்பு கிடைக்காத பொழுது சக வீரர்களுக்காக மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை தூக்கவும் தயங்குவதில்லை. அதையும்மகிழ்ச்சியோடு செய்கிறார். அது குறித்து யாரும் கிண்டலாக கூறினாலும் அதற்கு இவருடைய பதில் புன்னகையாகத்தான் இருக்கிறது.

இவரது அணிக்கான இந்த ஒத்துழைப்பு அணி நிர்வாகம் மட்டும் அல்லாமல் அணி ரசிகர்களையும் மனம் நெகிழ வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இவரைக் குறிப்பிட்டு “எங்களின் பொழியும் அன்புகள் உங்களுக்கு!” என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ட்விட்டரில் ” வி லவ் யூ சான்ட்னர்!” என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். மிகச் சிறந்த அணி வீரருக்கு ரசிகர்கள் காட்டும் அன்பு மிகச் சிறப்பான விஷயம்!