மும்பை இன்டியன்ஸ் பயிற்சியாளருக்கு பதில் சிஎஸ்கே பயிற்சியாளர் நியமனம்!

0
6625
IPL

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்கள் என்றால் அவர்கள் இருவர்தான். ஒருவர் சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங்; மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருந்த இன்னொருவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகேல ஜெயவர்த்தன!

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அணிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இரு அணி வீரர்களுக்கும் எப்படி போட்டியிருக்குமோ அதே போல் இரு அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும். யார் வகுக்கும் திட்டங்கள் மிகச் சிறந்தது என்பதை காட்ட கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் இருவருமே!

இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடர் தாண்டி உலகில் நடைபெறும் மற்ற டி20 தொடர்களில் பங்கு பெறும் பெரிய அணிகளுக்கும் பயிற்சியாளர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

இந்த வகையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஆன பிளமிங் ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரின் அணியான மெல்போன் ஸ்டார்ஸ், தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெயவர்த்தனே இங்கிலாந்து 100 பந்து தொடரில் சவுதர்ன் பிரேவ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்தத் தொடரின் முதல் வருடமான கடந்த வருடத்தில் இந்த அணிதான் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது இங்கிலாந்து 100 பந்து தொடரின் அணியான சவுதர்ன் பிரேவ் அணி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்த்தன நகர, அந்த இடத்திற்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான பிளமிங் கொண்டுவரப்பட்டுள்ளார்!

ஜெயவர்த்தனே அவருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். பிளமிங் அந்த அணிக்காக பணியாற்ற காத்திருக்க முடியாது மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்!

மும்பை அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜெயவர்த்தனாவை விலக்கிக் கொண்டது போலவே இப்பொழுது இங்கிலாந்திலும் நடந்திருப்பது அவரது பயிற்சி குறித்த பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது!