இந்திய கிரிக்கெட்

2026 ஐபிஎல் தோனி ஆடுவார்.. சாம்சன் உடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்.. சிஎஸ்கே தரும் வீரர் யார்? – வெளியான தகவல்கள்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நடைபெற இருக்கும் மினி ஏலத்திற்கு எந்தெந்த வீரர்களை வெளியேவிடும் என்பது சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி யாரையாவது டிரேடிங் செய்யுமா? என்பது குறித்தான கேள்விகளும் இருக்கிறது.

தோனி விளையாடுவார்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடுவார் என, அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதியாக தெரிவித்திருக்கிறார். தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராக இருப்பதாக தோனி கூறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் பட்டேல் லக்னோ, சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளிடம் சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை திறந்து விட்டிருப்பதாக செய்திகள் உறுதியாக தெரிவிக்கிறது. இதில் சிஎஸ்கே அணி அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே தரும் வீரர் யார்?

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற விரும்புவது வெளிப்படையான ஒரு செய்தியாக இருக்கிறது. நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு விளையாட விரும்பவில்லை என்பது உறுதி. இந்த நிலையில் சிஎஸ்கே எந்த வீரரை ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கும்? என்பது இறுதியாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: அடிச்சு சொல்றேன்.. வாஷிங்டன் சுந்தருக்கு டி20 உகோ-ல் வாய்ப்பு தர மாட்டாங்க.. இதுதான் காரணம் – ஸ்ரீகாந்த் பேச்சு

தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்கள் அணியில் விளையாடும் நட்சத்திர ஒருவரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்று விளையாட விருப்பமா? என்று கேட்டிருப்பதாகவும், இதற்கு அடுத்த வாரத்தில் விடை கிடைத்துவிடும் எனவும், கிரிக்பஸ் இணையதளத்தில் உறுதியான செய்தி வெளியாகியிருக்கிறது.எனவே இதுகுறித்து மேற்கொண்டு என்ன நடக்கும் என பார்க்கலாம்.

- Advertisement -
Published by