ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த வாரம் சனிக்கிழமை முதல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தற்போதைய சென்னை கேப்டன் அணிக்குள் கொண்டு வந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.
சென்னை அணியின் கேப்டன்
சென்னை அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அடிப்படை விளையான 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டில் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொன்னான வாய்ப்பு பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு இவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி தொடரை ஐந்தாவது இடத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ருத்ராஜ் சென்னை அணிக்குள் கொண்டுவரப்பட்ட விதம் குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.
இப்படித்தான் அவரை வாங்கினோம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்கள் ஸ்கவுட்டிங் குழுவில் சரத் மற்றும் சுனில் ஓயாசிஸ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் கவனம் வைத்து அதனை பார்த்துக் கொண்டிருந்தனர். சரத்திடம் இருந்து எங்களுக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், எதிர்காலத்திற்கான ஒரு வீரர் கிடைத்துவிட்டார் என்று தான் அவரிடம் இருந்து செய்தி வந்தது. நீங்கள் எதிர்காலத்திற்கான ஒரு வீரரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ருதுராஜை பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:50 ரன்னுக்கு 6 சிக்ஸர் அடிப்பேன்.. எங்க டீம் பிளான் ஒட்டு மொத்தமாக இதுதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி
அப்படித்தான் ஏலத்தில் ருதுவை வாங்குவோம் என்று நினைத்து அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம்” என்று கூறியிருக்கிறார். அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார் என்பது அவரது திறமையின் மூலமாகவே வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு விட மிகவும் வலுவான முறையில் இருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது என சுழற் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் உள்ள வீரர்கள் மணிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






