இன்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மீண்டும் தவறு செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
தற்போது ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் அகேல் ஹுசைன் இடத்திற்கு மேத்யூ ஷார்ட் கொண்டுவரப்பட்டார்.
ஹைதராபாத் ரன் குவிப்பு
இதைத் தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 15 பந்துகளில் அரை சதம் அடித்து 22 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த அணி பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழந்து 75 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் பெரிய ரன்னுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே பவுலர்கள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை கட்டுப்படுத்தினார்கள். ஹென்றி கிளாசன் தாக்குப்பிடித்து 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.
ருதுராஜ் சொதப்பல்
இந்த போட்டிக்கு கொண்டுவரப்பட்ட மேத்யூ ஷார்ட் பவர் பிளேயரில் இரண்டு ஓவர்கள் சுழல் பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் ருதுராஜ் அவரை மீண்டும் ஒரு ஓவருக்கு பவர் பிளேவில் கொண்டுவர அந்த ஓவரில் 25 ரன்களுக்கு மேல் சென்றது. அங்கு ஒரு ஓவருக்கு அன்சூல் காம்போஜை பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவர் ஒரு ஓவர் மட்டுமே பவர் பிளேவில் வந்து வீசினார்.
இதையும் படிங்க : இன்னைக்கு விராட் கோலி திருப்தியா இல்ல.. அத பாத்தப்பவே முடிவு பண்ணிட்டேன்.. எங்க பிளான் இதுதான் – கேஎல் ராகுல் பேட்டி
இந்த போட்டியில் அன்சூர் காம்போஜ் வெறும் மூன்று ஓவர் மட்டுமே பந்து வீச பயன்படுத்தப்பட்டார். அவர் அந்த மூன்று ஓவரில் 22 ரன் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு கடைசியாக இரண்டு ஓவர் மட்டும் இருப்பதாக நினைத்து ருதுராஜ் தவறு செய்து விட்டார். ஒரு ஓவரா அவருக்கு கொடுக்காமலே மறந்து விட்டார். தற்போது இதை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.






