இந்திய கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் ஒரு வாரமா இந்த விஷயம் நடந்திருக்கு.. அதனாலதான் இந்த ஒரு முடிவை எடுத்து இருக்கோம் – ருதுராஜ் பேச்சு

இன்று சென்னை சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே முன்னேற்றம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 10 போட்டிகளை விளையாடி அதில் 5 போட்டிகளில் ஒன்று பத்து புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதம் இருக்கிறது.

இந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்றால் சிஎஸ்கே அணி உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் தற்போது லக்னோ அணைக்கு எதிராக மட்டுமே இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுதான் காரணம்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்போது “நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். இதற்கு பின்னணியில் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. கடந்த ஒரு வார காலமாக இந்த ஆடுகளம் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவ்வப்போது இங்கு மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஆடுகளத்தில் ஏதாவது இருப்பதை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”

இதையும் படிங்க : விராட் கோலி அவுட் ஆனா அந்த உண்மைய ஒத்துக்கவே மாட்டார்.. ரெண்டு நாளைக்கு முன்ன அதுதான் நடந்தது – மஞ்ச்ரேக்கர் பேச்சு

“மேலும் இரவு போட்டிகள் போல் இல்லாமல் பகல் போட்டிகள் கொஞ்சம் வித்தியாசமாக தான் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆரம்பித்த விதத்திற்கு இப்பொழுது சிறப்பாக மாறி நல்ல நிலையில் இருக்கிறோம். அடுத்தடுத்த போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by