ஐபிஎல் 2024

நாங்க தோத்தது ஜஸ்ட் இந்த விஷயத்துலதான்.. ஆனா அடுத்த போட்டி கடினத்திலும் கடினமானது – ருதுராஜ் பேட்டி

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் விளக்கம் தந்திருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய வலிமையான அடித்தளத்தை உருவாக்கினார்கள். இதன் காரணமாக குஜராத் அணிக்கு போட்டியில் எந்த சிரமங்களும் இல்லை.

இன்றைய போட்டியில் சகா இல்லாத நிலையில் துவக்க ஆட்டக்காரராக வந்த சாய் சுதர்சன் 51 பந்தில் 103 ரன்கள், சுப்மன் கில் 55 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் குஜராத் அணியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு டேரில் மிட்சல் 34 பந்தில் 63 ரன்கள், மொயின் அலி 36 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்கள். இவர்களை தவிர யாரிடமிருந்தும் வெற்றிக்கான ரன் பங்களிப்புகள் வரவில்லை. 20 ஓவர்களில் சிஎஸ்கே 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்குப்பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் “இன்று நாங்கள் சரியாக பீல்டிங் செய்யாதது கொஞ்சம் எங்களை வீழ்த்தி விட்டது. இதன் காரணமாக 10 முதல் 15 ரன்கள் குஜராத் அணிக்கு சேர்த்து கொடுத்து விட்டோம். அதே சமயத்தில் நாங்கள் கடைசி ஐந்து ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தோம்.

இதையும் படிங்க : அதிரடி 2 சதங்கள்.. குஜராத் அபார வெற்றி.. சிக்கலான சிஎஸ்கே-வின் பிளே ஆஃப் வாய்ப்பு.. மாறிய ஐபிஎல் கள நிலவரங்கள்

அதே சமயத்தில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இருவருமே விளையாடிய விதம் மிகவும் விதிவிலக்காக இருந்தது. இப்படி இரண்டு பேட்ஸ்மேன்கள் மைதானத்தைச் சுற்றி அடிக்கும் பொழுது அவர்களை தடுப்பது கடினமான ஒன்று. எங்களின் அடுத்த போட்டி பகல் போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இது கடினமான அணிக்கு எதிராக கடினமான சூழ்நிலையில் விளையாட வேண்டியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Published by