இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக தங்கள் முதலில் பந்து வீச முடியாதது பிரச்சனை இல்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே அணி கேகேஆர் அணிக்கு எதிராக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் சிஎஸ்கே கேப்டன் டாஸ் தோற்றார். இந்த நிலையில் டாஸ் வென்ற ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
அஸ்வின் கருத்து
கடந்த போட்டியில் சிவப்பு மண் ஆடுகளத்தில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடி டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் தற்போது கருப்பு மண்ணும் ஆடுகளத்தில் கலந்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
எனவே முதலில் பந்து வீசும் பொழுது சாதகங்கள் இருக்கும் என்றும், கொல்கத்தா அணி அமைந்துள்ள விதத்திற்கு முதலில் பந்து வீசுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும், பந்து முன்பு போல பவுன்ஸ் அதிகம் இருக்காது என்றும் கூறியிருந்தார்.
பிரச்சனை இல்லை
இந்த நிலையில் டாஸ் தோற்ற ருதுராஜ் பேசும் போது ” நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருப்போம். ஆனால் இங்கு கடந்த சில போட்டிகளாக ஆடுகளத்தில் எந்தவித மாற்றமும் நடப்பதில்லை. எனவே எப்பொழுது பேட்டிங் செய்தாலும் ஒரே போல் தான் இருக்கிறது”
இதையும் படிங்க : ரகானே கேப்டனா இல்லனா ஆடவே முடியாது.. சிஎஸ்கேவை ஜெயிக்க இதை செய்யணும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“தற்போது நாங்கள் ஒரு சரியான காம்பினேஷனை உருவாக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மேலும் அணியில் எல்லா வீரர்களும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இப்போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் கொண்டு வர வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.






