சென்னை கேப்டன் தோனிக்கு தேவை 254 ரன்கள் – சாதனை பட்டியலில் தோனி இடம்பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

0
141
MS Dhoni CSK

கிரிக்கெட் உலகம் மொத்தமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. வழக்கமாக பங்கேற்கும் 8 அணிகளுடன் இந்த முறை குஜராத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அனைத்து அணிகளும் மிகத் தீவிரமான பயிற்சியில் தற்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பை மாநகரில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டும்தான் அனைத்து லீக் போட்டிகளும் நடைபெற உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாட உள்ளதால் பல தோனி ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சென்னை அணிக்காக நான்கு கோப்பைகள் ஐபிஎல் தொடரில் தோனி வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் அரங்கில் மிக சிறப்பாக கேப்டன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படும் தோனி, கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இரண்டு ஆண்டுகளாக தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இவரது தலைமையில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

- Advertisement -

கேப்டனாக ஒருபக்கம் கலக்கி வந்தாலும் அதே நேரத்தில் பேட்டிங் வீரராகவும் ஐபிஎல் தொடர் முழுவதும் ஜொலித்துள்ளார் தோனி. மேலும் தற்போது நடக்க இருக்கும் இந்த தொடரில் 254 ரன்கள் அவர் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை பட்டியலில் தோனியும் இணைவார். இதுவரை 6 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். கோலி, தவான், ரோகித், ரெய்னா, வார்னர் மற்றும் டிவிலியர்ஸ் ஆகியோர்தான் 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

அதிகமாக கீழ் வரிசையில் களம் இறங்கினாலும் தோனி இந்த சாதனை பட்டியலில் விரைவில் இணைய காத்திருக்கிறார். டிவில்லியர்ஸ் மற்றும் தோனி தவிர வேறு எந்த ஒரு மிடில் ஆர்டர் வரும் இனிமேல் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.