தற்போது நடைபெற்ற முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 35 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலைகள் 20வது ஓவரில் குஜராத் அணியை வெற்றி பெற வைத்த ராகுல் திவேட்டியா கடைசி ஓவர் சேசிங்கில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவிக்க, பதிலுக்கு வெற்றி இலக்கை சேசிங் செய்த குஜராத் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை விளையாடி வந்தது. இதில் குஜராத் அணியின் மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் பொறுப்பாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல கடைசி ஓவரில் ராகுல் டிவாட்டியா பேட்டிங் செய்ய வந்தார்.
6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை ஸ்டார்க் வீச, எந்தவித சிரமமும் இல்லாமல் முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த அவர், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஒருமுறை 20 வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்து வெற்றி பெற வைத்திருக்கிறார். அந்த வெற்றி இன்று வரைக்கும் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் 20வது ஓவரில் மூன்று முறை திவேட்டியா தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். மூன்று முறை வெற்றி பெற வைத்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் மும்பை அணிக்காக விளையாடிய கிரன் பொல்லார்ட் 4 முறையும், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பிராவோ இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் நிலையில் இந்தப் பட்டியில் எம்எஸ் தோனி கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கிறார்.
எப்போதுமே சேசிங் செய்வதற்கு பெயர் பெற்ற தோனி 20வது ஓவரில் மட்டும் 8 முறை தனது அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒருமுறை கடைசி ஓவரில் சேசிங் செய்தாலே அந்த வீரரை வெகு காலம் நினைவில் வைத்திருக்கும் ரசிகர்கள் சிஎஸ்கே கேப்டன் 8 முறை சேசிங்கல் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை பெரிய வியப்பில் ஆழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.