ஐபிஎல் 2024

தோனி நல்லா டிராமா பண்ணுவாரு.. தோனியின் ஓய்வு குறித்த கேள்வி.. சிஎஸ்கே மைக் ஹசி பதில்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17 வது ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் ஆக இருக்கலாம் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயத்தில் அவர் இன்னும் இது குறித்து எந்த விதமான பதில்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அம்பதி ராயுடு அந்த சீசன் உடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். தோனியும் அதுபோல வெற்றிகரமாக தன்னுடைய ஐபிஎல் பயணத்தை நிறைவு செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, இந்த ஆண்டு ரசிகர்களுக்காக களம் இறங்கி விளையாடுவேன் என சொல்லி வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஆண்டுதான் கடைசி ஆண்டா என அவர் இன்னும் சிறு தகவல்களை கூட வெளியில் தராமல் இருந்து வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட காரணத்தினால், அவரிடம் பேட்டி காண முடியாததால் எதுவும் தெரிவதில்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தோனி நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அவரைப் போல் முதல் பந்தில் இருந்து அடிப்பதற்கு சிறந்தவர்கள் யாரும் இல்லை எனவும், தனிப்பட்ட முறையில் தான் தோனியின் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக மைக் ஹசி பேசும் பொழுது “தோனி இன்னும் நன்றாக தயாராகி வந்து சிறப்பாக பேட்டி செய்கிறார். அவரால் சீக்கிரத்தில் பேட்டிங் வந்து நிறைய பந்துகளை எதிர் கொண்டு அடிக்க முடியும். உண்மையில் சீசனிலும் நல்ல பேட்டிங் டச்சில் இருக்கிறார். அவர்முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவரை உடல் ரீதியாக நாம் நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவரும் ஆரம்பத்திலிருந்து தன்னை நிர்வகித்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த முடிவை அவர் தான் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் வீரர் அணிந்த விசித்திரப் கருவி.. வியக்க வைக்கும் காரணம்.. கிரிக்கெட் உலகில் வரவேற்பு

அவர் ஒரு சிறிய டிராமாவை உருவாக்க விரும்புகிறார். அதனால் அவரிடம் இருந்து எந்த முடிவையும் இப்பொழுது எதிர்பார்க்க மாட்டேன். மேலும் அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே வந்து விளையாடுவதை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியும். அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவரை நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவேஅவர் பேட்டிங்கில் பின்பகுதியில் வருகிறார். ஆனாலும் அவரைப்போல் முதல் பந்தில் இருந்து கிளீன் ஹிட் அடிப்பதில் வேறு யாரும் சிறந்தவர்கள் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Published by