டாப் 10

தமிழ் படங்களில் நடித்துள்ள 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்

இந்திய சினிமாவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு ஒரு நற்பெயர் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ் மொழியில் இருந்து வரும் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு சில படங்களை அவர்கள் அவர்களது மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பல தமிழ் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் இருக்கும் அனைத்து நடிகர்கள் அதேபோல வெளிநாடுகளில் இருந்தும் ஒரு சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்களும் தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. இர்பான் பதான்

இந்தியாவுக்காக விளையாடிய ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் இவரும் ஒருவர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு சில சமயங்களில் அனைத்து தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களையும் குவிப்பார். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதற்கு பிறகு ரோடு சேப்டி உலக சீரிஸ் தொடரிலும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறார். இவர் நமது சியான் விக்ரம் நடித்து ரிலீசாக காத்திருக்கும் கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டிமான்டி காலனி மற்றும் இமைக்காநொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிந்த வரையில் இந்த படம் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

2. ஹர்பஜன் சிங்

இந்தியாவுக்காக 2007ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடரிலும் 2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்ற மிகச் சிறந்த ஸ்பின் பந்துவீச்சாளர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிறைய சாதனைகளை இந்திய அணிக்காக வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேபோல ஐபிஎல் தொடர்களில் மும்பை அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடி அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று ஆண்டுகள் விளையாடினார். தற்பொழுது கொல்கத்தா அணியில் இவர் விளையாடி வருகிறார். சென்னை அணியில் மூன்று ஆண்டுகாலம் இவர் விளையாடிய வேளையில் இவருக்கு தமிழக ரசிகர்கள் ஒரு பக்கம் அதிகமானார்கள்.

பிரண்ட்ஷிப் என்ற தலைப்பில் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் ஒரு தமிழ் படத்தில் இவர் நடித்திருக்கிறார். அந்த படத்தில் அர்ஜுன் சார்ஜா மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

3. சடகோபன் ரமேஷ்

இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர். இடது கையில் பேட்டிங் செய்து அதேசமயம் வலது கையில் ஸ்பின் பவுலிங் போட கூடிய ஒரு ஆல்ரவுண்டர் வீரர் இவர். இருப்பினும் மிக நீண்ட ஆண்டுகாலம் இந்திய அணியில் இவரால் நீடிக்க முடியவில்லை.

இவர் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது ஒரு சிலருக்கு நன்றாக தெரியும். போட்டா போட்டி என்கிற படத்தில் கதாநாயகனாகவும், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற படத்தில் துணை கதாபாத்திரமாகவும் சடகோபன் ரமேஷ் நடித்திருக்கிறார்.

4. வருன் சக்ரவர்த்தி

இந்திய இளம் ஸ்பின் பந்து வீச்சாளரான இவர் ஆரம்பத்தில் பஞ்சாப் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார். பஞ்சாப் அணியில் இவருக்கான வாய்ப்பு அதிகமாக வழங்கப்படவில்லை. அதன் பின்னர் கொல்கத்தா அணியில் மிக சிறப்பாக விளையாடிய இந்திய அளவில் பிரபலமானார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விளையாடும் வாய்ப்பை தனது உடல் தகுதி காரணமாக தவறவிட்டார். எனினும் அடுத்த மாதம் நடக்க இருக்கின்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக நடித்து இருப்பார். விஷ்ணு விஷால் அந்த படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருப்பார். அவருடைய அணியில் இருக்கும் சக வீரராக சக்கரவர்த்தி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

5. டுவைன் பிராவோ

உலக அளவில் நடக்கும் டி20 தொடரில் எந்த தொடர்பை எடுத்துக் கொண்டாலும் இவரது பெயர் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் இவர். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல ஆண்டுகாலமாக விளையாடி வருகிறார்.

அதன் காரணமாகவே அவருக்கு ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கின்றார்கள். தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவரை சித்திரம் பேசுதடி பாகம் 2 படத்தில் ஒரு பாடலில் ஆட வைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி அந்த படத்தில் “ஏன்டா” எனப்படுகிற பாடலில் இவரை நடிக்க வைத்தார்கள். அந்த பாடல் வெளியான வேலையில் தமிழகமெங்கும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Published by