டி20 உலகக் கோப்பை 2024

கோப்பையை இப்பவே கொடுத்துடுங்க.. வெஸ்ட் இண்டீஸ் டி20 உலக கோப்பை அணி.. 2 சர்ப்ரைஸ் மாற்றங்கள்

ஐசிசி நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி துவங்குகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் தனது டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டிருக்கிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் இரண்டு நாடுகளில் ஒரு நாடாக வெஸ்ட் இண்டீஸ் இருக்கின்ற காரணத்தினால் நேரடியாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி பயிற்சியில், ரோமன் பவல் தலைமையில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் சொந்த நாட்டில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ள அணியாகவும் மாறி இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ரோமன் பவல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாட சம்மதிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் டி20 உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் சுழல் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கும் என எல்லோரும் நினைக்கும் வேளையில், அந்த அணியில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் அகேல் ஹூசைன் மற்றும் குடகேஷ் மோட்டி இருவர் மட்டுமே இடம்பெற்ற இருக்கிறார்கள். மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன் ரோஸ்டன் சேஸ் இருக்கிறார். ஆனால் சாகல் குல்தீப் போன்ற மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

இதையும் படிங்க : சுனில் நரைன் பகலில்தான் தூங்குவார்.. யார் கூடவும் பேச மாட்டார்.. காரணம் தெரியுமா? – வாசிம் அக்ரம் பேட்டி

2024 டி20 உலகக் கோப்பை 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டிஸ் அணி :

ரோவ்மன் பவல் (கே), அல்ஜாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹூசைன், ஷாமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.

Published by