ஆள விடுங்க.. கோச் பதவியே வேணாம்.. ராஜினாமா செய்த டுமினி.. விளக்கம் கொடுத்த கிரிக்கெட் போர்டு.. முழு விபரம்

0
164

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் ஒயிட் பால் பேட்டிங் பயிற்சியாளரான ஜேபி டுமினி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் அதற்கான காரணத்தை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விளக்கியுள்ளது.

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் வேளையில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவிக்க, அதனைத் தொடர்ந்து இலங்கை அணி தற்போது மூன்று விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணியின் ஒயிட் பால் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த ஜேபி டுமினி திடீரென தனது பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். திடீரென அவர் ராஜினாமா செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அது குறித்து விரிவான தகவலை தற்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறும்போது “தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தென்னாபிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி பரஸ்பர ஒப்பந்தத்தின் காரணமாக தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறது. அவரது பதவிக்காலத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு செய்த பங்களிப்பு மிகப்பெரியது.

இதையும் படிங்க:ஆஸி 2வது டெஸ்ட்.. சுந்தருக்கு பதிலா அஸ்வின் வந்த காரணமே இதான்.. யோசிச்சு செஞ்சோம் – இந்திய பீல்டிங் கோச் பேட்டி

அவரது இடத்தை நிரப்புவதற்கான சரியான மாற்று ஏற்பாடு தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெள்ளை பந்து பேட்டிங் பயிற்சியாளருக்கான மாற்றுத் தேர்வு விரைவாக அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது. டுமினி கடந்த மார்ச் 2023 இல் இருந்து வரையறுக்கப்பட்ட ஓவர்களில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாப்பிரிக்க ஒயிட் பால் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் விளையாட உள்ளதால் அதற்கு முன்பாக சரியான பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -