டாப் 10

வித்தியாசமாக பந்துவீசும் ஸ்டைலை கொண்ட 5 பந்து வீச்சாளர்கள்

கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை யில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பந்து வீசுவது கிடையாது. ஒரு சிலர் வழக்கமான ஸ்டைலில் ஓடிவந்து பந்து வீசுவார்கள். ஆனால் ஒரு சிலர் சற்று வித்தியாசமாக பந்து வீசுவார்கள்.

- Advertisement -

அவர்களது ஸ்டைல் மிக வித்தியாசமாக இருந்தாலும் அது அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும். உதாரணத்திற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வித்தியாசமான பௌலிங் ஸ்டைலை கொண்டவர். தற்பொழுது அதேபோல வித்தியாசமான பௌலிங் ஸ்டைல கொண்டுள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

1. சொஹைல் தன்வீர்

Photo: Getty Images

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு தலைசிறந்த வீரர் தன்வீர். பந்துவீச்சாளர்கள் அனைவரும் வலது கையில் பந்தை ரிலீஸ் செய்வதற்கு கிரீஸில் வலதுகாலை பயன்படுத்தி பின்னர் பந்தை ரிலீஸ் செய்வார்கள். ஆனால் தன்வீர் இடது கையில் பந்து வீச தனது வலது காலை பயன்படுத்தி பந்தை தனது இடது கையில் ரிலீஸ் செய்வார்.

இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக இருந்தாலும் இவர் மாதிரி பந்து வீசுவது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல தனது பாகிஸ்தான் அணிக்காக 121 சர்வதேச போட்டிகளில் விளையாடி 130 சர்வதேச விக்கட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

2. பவுல் ஆடம்ஸ்

Photo: Getty Images

தென்ஆப்பிரிக்க அணியில் விளையாடிய மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் மொத்தமாக 69 சர்வதேச போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இவர் பந்து வீசுவது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். திடீரென கிரீஸ்க்கு முன்னர் குதித்து தனது கையை நன்றாக வளைத்து சுழற்றி பந்து வீசுவார். இவர் வீசும் பொழுது பந்தை இவர் தனது கண்களால் பார்க்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு நடந்த பெப்ஸி சார்ஜா கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் விளையாடிய போட்டியில் இந்த போட்டி இவருடைய சிறந்த போட்டி என்று கூட கூறலாம். அந்த போட்டியின் முடிவில் இவர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. கெவின் கொத்திகோடா

Photo Source: Twitter

அண்டர் 19 ஆசிய கோப்பை மலேசியாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது இவரது பெயர் அதிக அளவில் பேசப்பட்டது. முன்னர் கூறிய தென்ஆப்பிரிக்கா வீரர் பவுல் ஆடம்ஸ் போல இவரும் பந்து வீசுகிறார் என செய்திகள் பரவியது.

பவுலா ஆடம்ஸ் இடது கையில் பந்து வீசுவது போல இவர் தனது வலது கையில் பந்து வீசுவார் அவ்வளவுதான் வித்தியாசம். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான பௌலிங் ஸ்டைலை கொண்டுள்ளார்கள். இலங்கையில் உணவதுன என்கிற ஊரில் பிறந்த கெவின் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சிவில் கவுசிக்

Photo: BCCI/IPL

2014ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கௌஷிக் விளையாட வந்தார். இவர் பந்து வீசுவதை கண்ட அனைவரும் திகைத்துப் போயினர். தென் ஆப்பிரிக்க வீரர் பவுல் ஆடம்ஸ் போலவே இவரும் பந்து வீசும்பொழுது பந்தை தனது கண்களால் பார்க்க மாட்டார். அதேபோல தனது கைகள் இரண்டையும் மேல் உயர்த்தி பந்து வீசுவார். அந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இவர் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விரலில் ஏற்பட்ட காயத்தினால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. அதன் பின்னர் மீண்டும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

5. முத்தையா முரளிதரன்

Photo: Getty Images

முத்தையா முரளிதரன் எப்பொழுதும் தனது பந்துகளை மறைத்துக் கொண்டுதான் வந்துவிடுவார். பந்தை வைத்துக் கொண்டு கையை பின்புறமாக திருப்பி, கிரீஸ்ஸுக்கு வந்து பந்தை வெளியிடும் வேலையில் தான் கையை திசை திருப்புவார். இதன் காரணமாகவே பல பேட்ஸ்மேன்கள் பந்தை எந்த வாறு பிடித்திருக்கிறார் என்றும் வந்து எந்த திசையில் வரப்போகிறது என்றும் புரியாமல் குழம்பிப் போவார்கள்.

1995ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இவரது பந்துவீச்சு முறையாக இல்லை என்று கூறி, இவர் வீசிய அனைத்து பந்துகளையும் நோபால் அம்பயர் டாரெல் ஹேர் என்று கூறினார். பின்னர் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா நாங்கள் எங்கள் வீரர்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டிய தொடர்ந்து, மீண்டும் இவரது பந்துகளை முறையாக எடுத்துக் கொண்டனர்.

இலங்கை அணிக்காக 495 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் மொத்தமாக 1347 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by