2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்

0
142
Vijay Shankar and Adam Zampa

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியது அனைவரும் அறிவோம் . கடந்த ஆண்டு இறுதியில் கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் மற்றும் ஐபிஎல் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரே நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் என பல்வேறு தொடர்களை கொண்டு விளையாடி வருகிறது .

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஐந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது பேச்சுலர் வாழ்க்கைக்கு பூட்டு போட்டு இந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்கள்

- Advertisement -

1.விஜய் சங்கர்

இந்திய அணிக்காக 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடி தனது முதலாவது பந்திலேயே விக்கெட் எடுத்த 3டி ப்ளேயராவார். துவக்கத்தில் சிறப்பாக விளையாடி சமீபகாலமாக சொதப்பி வரும் இவர் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து திருமண வாழ்க்கைக்கு மாறி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வைஷாலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

2. ஜஸ்பிரித் பும்ரா

Jasprit and Sanjana

ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கென ஒரு ஸ்டையிலை உருவாக்கி தற்போது இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரராகவும் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகவும் உருவெடுத்திருக்கிறார். கிரிக்கெட்டில் கலக்கும் பும்ரா தனது திருமண வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொண்டார்.

3.ஆடம் ஜாம்பா

இன்றைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஆடம் ஜாம்பா . ஐ.பி.எல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் இவர் பெங்களுர் அணியில் இருக்கும் நட்சத்திர வெளிநாட்டு வீரர்களில் இவர் முக்கியமானவராக இருக்கிறார். சில தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு விளையாடவில்லை. இந்நிலையில் ஆடம் ஜம்பா இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காதலி ஹட்டியை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

4.ஜெய்தேவ் உனாட்கட்

ஐ.பி.எல்லில் சொதப்பினாலும் கோடிகளில் புரளும் வீரர் யார் என்றால் அதுக்கு ஜெய்தேவ் உனட்கட் . சில ஐ.பி.எல் தொடர்களில் நிறைய அடிவாங்கும் இந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது . ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியின் கேப்டனாக இருக்கும் உனாட்கட் ரின்னி காந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

5.ரோஹித் தாமோதரன்

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்ட்ன் ரோஹித் தாமோதரன் பிரம்மாண்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் மகளான ஐஷ்வர்யாவை ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார் . கொரோனா காரணமாக திருமணத்திற்க்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் . பின்னர் பிரம்மாண்டமான ரிஷப்ஷன் நடைப்பெற்றது