டாப் 10

சோகமாக முடிந்த தலைசிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் கிரிக்கெட் பயணம்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் தங்களுடைய கடைசி போட்டி குறித்து அல்லது அதை நினைத்து விளையாட மாட்டார்கள். முடிந்தவரை சிறப்பாக தங்களது நாட்டு அணிக்காக விளையாடி விட்டு சந்தோஷமாக ஓய்வு எடுத்துக்கொள்ள தான் அனைவரும் நினைப்பார்கள். இருப்பினும் எதிர்பாராவிதமாக ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய கிரிக்கெட் பயணத்தை மிக சோகமாக முடித்துள்ளார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

1. நவ்ஜோத் சித்து

கள்ளங்கபடம் இல்லாத ஒரு கிரிக்கெட் வீரர் ஆரம்ப கட்டங்களில் யார் என்று பார்த்தால் அது இந்திய கிரிக்கெட் அணியில் அனைவரும் மிக சகஜமாக பழகக் கூடிய ஒருவர். இருப்பினும் ஒருமுறை வடேகர் இவரை நல்ல உடல் தகுதியுடன் இல்லை என்று கூறிவிட்டார். அதனை தொடர்ந்து உலக கோப்பை தொடரில் விளையாடும் அளவுக்கு சித்து பொருத்தமானவராக தற்பொழுது இல்லை என்று அசாருதீன் ஒரு பத்திரிக்கை செய்தியில் கூறிவிட்டார்.

இதனை சீரியசாக எடுத்துக்கொண்ட சித்து சில நாட்களிலேயே தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டார். இது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.

2. விவிஎஸ் லட்சுமணன்

இந்திய டெஸ்ட் அணியில் ஆபத்பாந்தவனாக விளங்கிய வீரர் இவர். அவ்வளவு சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை 2011ம் ஆண்டு நிறைய இந்திய ரசிகர்களும் பத்திரிக்கை நிறுவனங்களும் வெகுவாக விமர்சித்தது.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் முழுவதுமாக விளையாடி இரண்டு அரை சதங்கள் மட்டும் இவர் அடித்திருந்தார். அதனை வெகுவாக விமர்சித்து, இவருக்கு இந்திய அணியில் விளையாடும் காலம் முடிந்துவிட்டது என்று கூறினார்கள். அதனை கேட்டவுடன் விவிஎஸ் லட்சுமணன் தன்னுடைய ஓய்வை அறிவித்து விட்டார். இந்த செய்தியும் இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் வருத்தமடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

3. ஜேம்ஸ் டெய்லர்

இங்கிலாந்து அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய மற்றும் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்த ஒரு வீரர் இவர். இருப்பினும் விதியின் வசமாக தன்னுடைய 26 வயதில் இதயத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை இவர் முடித்துக் கொண்டார். இந்த செய்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

4. மார்க் பவுச்சர்

தென்னாப்பிரிக்கா அணிகள் மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர் மார்க் பவுச்சர். ஒரு போட்டியில் இம்ரான் தாகிர் வீசிய ஒரு பந்து இவரது கிரிக்கெட் பயணத்தை முடித்து விட்டது. அவர் வீசிய பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. ஸ்டம்புக்கு மேலிருந்த பைல்ஸ் குச்சி இவரது கண்ணில் பட்ட காரணத்தினால் இவருக்கு கண்ணில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக இவரால் அதற்கு அடுத்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. எனவே கனத்த இதயத்துடன் தன்னுடைய ஓய்வை எடுத்துக்கொண்டார்.

5. ஹென்றி ஒலாங்கோ

ஜிம்பாப்வே அணிகள் மிக சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இவரும் ஒருவர். 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபொழுது ஒரு போட்டியில் இவர் தனது கையில் கருப்பு பேண்டை அணிந்து கொண்டார்.

தனது நாட்டில் ஜனநாயகம் சரியாக இல்லாத காரணத்தினால் அதை பிரதிபலிக்கும் வண்ணம் இவர் அணிந்திருந்தார். இது அந்த நாட்டு பிரமுகர்களை மிகப்பெரிய அளவில் கோபப்படுத்தியது. இது சம்பந்தமாக இவர் சில நாட்களில் கைது கூட ஆனார். அதன் பின்னர் இவர் தன்னுடைய ஓய்வெடுத்துக் கொண்டார்.

Published by