இந்த 4 வீரர்கள் மட்டும் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உத்தரவு

0
681
Australian Players in IPL 2022

1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி கடைசியாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. சுமார் இருபத்தி நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். மார்ச் 4ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி வரை 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் இந்த இரு அணிகள் விளையாட போகின்றன.

இதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியலை சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அளித்திருந்தது. ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தானில் இருக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அவர்கள் எவ்வாறு பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கலாம்

இது சம்பந்தமாக பேசியுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணி வீரர்களான டேவிட் வார்னர் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அவர்களது அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானில் அனைத்து வகை போட்டியிலும் பங்கெடுத்த பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அவர்களது அணிகளுக்கு விளையாடலாம். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனைத்து போட்டியிலும் விளையாடி முடித்த பின்னரே அவர்கள் பங்கேற்க முடியும் என்றும் கறாராக கூறியுள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 4ஆம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 29ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பின்னர் ஒரு டி20 போட்டி ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று நடைபெற்று, அன்றுடன் இந்த இரு அணிகளுக்கு இடையிலான சுற்றுப்பயணம் முடிவடைகிறது.

- Advertisement -