தொடர்ந்து மெதுவான பந்துவீச்சு; ஃபைனலில் இருக்க மாட்டாரா தோனி? ஐபிஎல் விதி என்ன சொல்கிறது?

0
3173
Dhoni

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

இந்தப் போட்டியில் இரண்டாவது பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டது.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் தங்களது பந்துவீச்சை 90 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இதைத் தாண்டும் பொழுது சம்பந்தப்பட்ட வீரர் மற்றும் கேப்டன் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது இரண்டாவது முறை நடந்தால் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது.

இந்த வகையில் மகேந்திர சிங் தோனி ஏற்கனவே மெதுவான பந்து வீச்சுக்காக அபராதம் செலுத்தி இருக்கிறார். ஆனால் நேற்று குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் மெதுவாகவே சென்னை பந்து வீசியது.

திடீரென்று களத்தில் இருந்து வெளியேறிய பதிரனா சில நிமிடங்கள் கழித்து களத்திற்குள் வந்தார். அவர் வந்ததும் பந்தை வீசுவதற்கு தயாராக நடுவர்கள் தடுத்து விட்டார்கள். காரணம் நீங்கள் வெளியே செலவு செய்த நேரத்தை உள்ளே வந்தும் செலவு செய்த பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படும் என்பது விதி.

- Advertisement -

இதற்காக மகேந்திர சிங் தோனி கள நடுவர்களுடன் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து அந்த நேரத்தை நகர்த்தி பதிரனாவை சாமர்த்தியமாக பந்து வீச வைத்தார். இதனால் சென்னை அணி பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.

இரண்டு முறை மெதுவாக சென்னை பந்துவீசி விட்டதால் இந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு விளையாடத் தடை விதிக்கப்படுமா என்கின்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஏற்பட்டிருக்கிறது.

கேப்டன் பதவியை மாற்றி கொடுத்தாலோ அல்லது இதில் ஐபிஎல் நிர்வாகம் தலையிடாவிட்டாலும் தடைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் என்ன இறுதியாக முடிவு எடுக்கப்படும் என்று அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்!