இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் எடுத்த முடிவுகள் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகளை வெற்றி பெற்று இருந்தாலும் கூட, வெறும் 13.2 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகத்தின் தரப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகவும் மோசமாக அமைந்தது.
இதுவரையில் அபிஷேக் ஷர்மா போட்டியில் முதல் பந்தை சந்தித்தது விளையாடி வந்தார். இன்று கில் போட்டியில் முதல் பந்தை சந்தித்து விளையாடினார். ஹேசில்வுட் வீசிய அந்த முதல் ஓவரில் கில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இது இந்திய அணிக்கு எடுத்ததுமே ரன் அழுத்தத்தை உருவாக்கியது.
இதற்கு அடுத்து மூன்றாவது ஓவரில் கில் ஆட்டம் இழந்ததும், கேப்டன் சூரியகுமார் யாதவ் அல்லது திலக் வர்மா இருவரில் ஒருவர் களம் இறங்கி இருக்க வேண்டும். இப்படி இருக்க ஐந்தாவது இடத்தை ஒதுக்கி உள்ள சஞ்சு சாம்சனை மூன்றாவது இடத்திற்கு அனுப்பினார்கள். அவர் வெறும் இரண்டு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 5 விக்கெட்டுகளை வேகமாக இழந்ததும் அடுத்து வரவேண்டிய சிவம் துபே இடத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ஹர்ஷித் ராணாவை கொண்டு வந்தார்கள். அபிஷேக் ஷர்மா 27 பந்துகள் மட்டுமே சந்தித்திருக்க, ஹர்ஷித் ராணா அதற்கு முன்பாகவே 30 பந்துகள் தாண்டி விளையாடினார். சிறந்த பேட்ஸ்மேன் விளையாட நிறைய பந்துகள் கிடைக்கவில்லை. மேலும் சிவம் துபே தன்னம்பிக்கையும் உடைக்கப்பட்டது.
இதையும் படிங்க : இன்னைக்கு தோத்தாலும் அபிஷேக் அதை மட்டும் மாத்திக்க கூடாது.. மீதி மீங்க இத செஞ்சா ஜெயிக்கலாம் – சூரியகுமார் யாதவ் பேட்டி
ஆஸ்திரேலியா சூழ்நிலையில் இந்திய அணிக்கு மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை. குல்தீப் அல்லது வருண் சக்கரவர்த்தி இடத்தில் அர்ஸ்தீப் சிங் விளையாட வேண்டும். அவர் விளையாடி இருந்தால் பும்ராவுடன் பவர் பிளேவில் பந்து வீசி இருப்பார். ஹர்ஷித்ராணா மிடில் ஓவர்களுக்கு சென்றிருக்கலாம். இப்படி செய்திருந்தால் சிவம் துபே இடத்திற்கு சிறப்பான பினிஷர் ரிங்கு சிங்கை விளையாட வைத்திருக்கலாம். நான்கு மாதங்களில் டி20 உலக கோப்பையை வைத்துக் கொண்டு கம்பீர் செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் தற்போது பெரிய விமர்சனமாக மாறி இருக்கிறது.