ஆஸ்திரேலியாவிற்கு விளையாட செல்லும் இளம் இந்திய வீரர்கள் !

0
627
Mukesh Choudhary and Chetan Sakariya

இந்திய அணிக்காக ராகுல் டிராவிட்டின் தற்காலிக பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமானவர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியா. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஐபிஎல் வாய்ப்பை பெற்ற இவர், ஐபிஎல் 2021 சீசனால் அந்த அணிக்கு மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட இவருக்கு, டெல்லி அணியில் பெரிதாய் ஆடும் அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவரைப்போலவே இன்னொரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் செளத்ரி. இவரை இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியால் வாங்கப்பட்டார். சென்னை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தால் விளையாட முடியாத காரணத்தால், சென்னை அணியில் 13 ஆட்டங்களில் விளையாடிய இவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 மேக்ஸ் தொடரில் விளையாடுகிறார்கள். இந்தத் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல், செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது எம்ஆர்எப் பேஸ் பவுண்டேசன் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவோடு செய்துகொண்ட ஒரு வர்த்தக பரிமாற்றம் ஆகும்.

இது குறித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அறிக்கையில் “எம்ஆர்எப் பேஸ் பவுன்டேசனுக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் வீரர் மற்றும் பயிற்சி பரிமாற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த வருகிறது. கோவிட் தொற்றால் கடந்த இருவருடங்களாக இது நடைபெறவில்லை. இடைநிறுத்தப்பட்ட இந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதற்காக தற்போது இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது!

இந்த ஆஸ்திரேலியா டி20 மேக்ஸ் தொடரில் சேத்தன் சகாரியா சன்சைன் கோஸ்ட் அணிக்காகவும், முகேஷ் செளத்ரி வொன்னம்-மேன்லி அணிக்காகவும் விளையாடுகிறார்கள். இவர் புபா தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெறுவதோடு குயின்ஸ்லாந்து புல்ஸ் அணியின் முன் தயாரிப்பு பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.

- Advertisement -

சேத்தன் சகாரியா, முகேஷ் செளத்ரி இருவரும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதோடு, பந்தை ரைட் ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கு உள்நோக்கி ஸ்விங் செய்யக்கூடியவர்கள். இவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் இந்தப் பயிற்சிகள், கொஞ்சம் வேகம், ஸ்விங், கோணங்களை அதிகமாக்கினால் அது பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக முகேஷ் செளத்ரி இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், ஆஸ்திரேலியா இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க் கலவையில் பந்துவீசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!