நடப்பு ஆண்டில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வி மற்றும் நான்கு போட்டிகளில் வெற்றி என புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வன்ஸ் பேடி எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ஒரு வீரராக மட்டுமே கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், சரியான உடல் தகுதியோடு இரண்டு ஆண்டுகளும் விளையாடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவரது வேகமான ஸ்டம்பிங் திறன் மற்றும் இறுதி கட்டத்தில் இறங்கி அடிக்கக்கூடிய சிக்ஸர்கள் என சென்னை அணிக்கு போதுமான விகிதத்தில் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். தற்போது 43 வயதாகி வரும் எம்.எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முழு உடல் தகுதியோடு விளையாடுவாரா? என்பது அனைவரின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் பங்களிப்பு போதுமான அளவு அமையவில்லை.
சரியான வீரர்களை சென்னை அணிக்கு தேர்வு செய்யாததால் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவி வந்த நிலையில், மீண்டும் கேப்டனாக பதவி ஏற்ற தோனி அடுத்த ஆண்டில் அணி சிறப்பாக விளையாடும் வகையில் சரியான வீரர்களை தேர்வு செய்தார். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு எம்எஸ் தோனி மீண்டும் விளையாட வேண்டுமா? அல்லது ஓய்வு பெறக்கூடிய நேரம் வந்துவிட்டதா? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழும்பி வரும் நிலையில் அதற்கு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட மிடில் வரிசை அதிரடி ஆட்டக்காரர் வன்ஸ் பேடி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:51 பந்து 121 ரன்.. என்னையா தூக்க பிளான் போடுறீங்க.. இங்க நான்தான் ராஜா.. கம்பீருக்கு மெசேஜ் அனுப்பிய சஞ்சு சாம்சன்.. கேசிஎல் 2025
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆமாம், எம்எஸ் தோனி அடுத்த ஆண்டில் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் மட்டுமல்ல, சென்னை முழுவதும் அவர் இந்த ஆண்டும் சிஎஸ்கேவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். அவர் அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனென்றால் அவர் அணிக்கு அளிக்கக் கூடிய பங்களிப்பு மற்றும் போட்டிகளில் விளையாடும் போது பயன்படுத்தக்கூடிய அவரது மூளை வேறு யாராலும் இதனை செய்ய முடியாது” என்று பேசி இருக்கிறார்.