219 ரன் இலக்கு.. பஞ்சாப் இளம் வீரர் அபார சதம்.. முயற்சி செய்த சிஎஸ்கே.. கடைசி வரை போராடிய தோனி.. 18 ரன்னில் சென்னை தோல்வி

0
239

நடப்பு ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

சிஎஸ்கே பஞ்சாப் மோதல்

18ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப் சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா ஆகியோர் களம் இறங்க சிம்ரன்சிங் கலில் அகமதுவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு முனையில் பிரியன்ஸ் ஆர்யா தனது அதிரடி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்க மறுமுனையில் பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் வரிசை அப்படியே சரிந்தது. இருப்பினும் இளம் கன்று பயம் அறியாது என்பது போல 19 பந்துகளில் 50 ரன்கள் கடந்த அவர் அடுத்த 39 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 42 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸ் என 103 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் சஷாஙக் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் குவிக்க பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.

- Advertisement -

18 ரன்னில் சிஎஸ்கே தோல்வி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. இந்த முறை சிஎஸ்கே தனது முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. இதில் முதலில் ரச்சின் ரவிந்த்ரா 36 ரன்கள் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ருத்ராஜ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, சிக்கலில் மாட்டிக் கொண்ட சென்னை அணியை சிவம் தூபே மற்றும் கான்வே ஆகியோர் ஓரளவு போராடி காப்பாற்றினர். 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்து சிவம் துபே ஆட்டமிழக்க அதற்குப் பிறகு எம்.எஸ். தோனி களம் இறங்கினார்.

இதையும் படிங்க:4 ரன்னில் வெற்றி.. பவுலர்ஸ்கிட்ட நான் இதை சொன்னதும் அப்படியே செஞ்சாங்க.. அதான் நாங்க ஜெயிச்சோம் – ரிஷப் பண்ட் பேட்டி

4 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் எம்எஸ் தோனி தன்னால் முடிந்த வரை போராடினார். பெர்குஷனின் 18 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த டோனி, 19ஆவது ஓவரில் அர்ஸ்திப் சிங் பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி என அடித்து அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. இருப்பினும் கடைசி ஓவரை யாஷ் தக்கூர் வீச முதல் பந்தில் தோனி ஆட்டம் இழந்தார். 12 பந்துகளை சந்தித்த எம்எஸ் தோனி 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 27 ரன்கள் குவித்து வெளியேற, சிஎஸ்கே முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -