2023 உலகக் கோப்பை தேதிகளில் மீண்டும் மாற்றமா.? – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதில் என்ன.?

0
87

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த 13 வது உலகக்கோப்பையில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை 45 நாட்கள் உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெற உள்ளது .

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில போட்டிகளில் தேதிகள் மாற்றம் செய்ய வேண்டி மாநில கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ நிர்வாகிகளை தொடர்பு கொண்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசி உடன் பேசி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்ட உலகக் கோப்பை கால அட்டவணை வெளியிடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் மாற்றங்கள் செய்வதற்காக ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலக கோப்பையில் மீண்டும் மாற்றம் இருக்குமா என்று ரசிகர்களும் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளும் அதிருப்தி அடைந்தன.

ஹைதராபாத் நகரில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளுக்கு லாஜிஸ்டிக் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்வதில் சிரமம் இருப்பதாகவும் இதனால் அந்தப் போட்டிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டி ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் பிசிசிஐ நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை காண கால அட்டவணையில் மீண்டும் ஒரு மாற்றமா என்ற அதிருப்தி ரசிகர்களிடமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் காணப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவல்கள் குறித்து மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ துணைத் தலைவர் ஆன ராஜீவ் சுக்லா. இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கும் அவர் ஹைதராபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு நான் தான் பொறுப்புதாரி. இங்கு நடைபெறும் போட்டிகள் குறித்து ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் தெரிவிக்கலாம். நான் அதை சரி செய்து தருவேன். உலகக் கோப்பை போட்டிகளில் மீண்டும் மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. அது பிசிசிஐ மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லை . சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒரு முடிவு என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து மூன்று உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும் நடைபெற உள்ளது . மேலும் அக்டோபர் ஆறாம் தேதி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்த அணிகளுக்கான போட்டியும் ஹைதராபாத் நகரில் வைத்து நடைபெற உள்ளது .

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள் நடத்துவதில் இருக்கும் லாஜிஸ்டிக் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் பிசிசியிடம் முறையிட்டு இருந்தது. ஆனால் அதனை பிசிசிஐ மறுத்து இருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் ஏற்கனவே தேதிகள் மற்றும் போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.