சாம்பியன்ஸ் கோப்பை.. இந்தியாவின் முதல் போட்டியில் எந்த பவுலருக்கு வாய்ப்பு? கம்பீர் அதிரடி முடிவு

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. உலகின் டாப் எட்டு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது.  இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

- Advertisement -

இந்த போட்டி துபாயில் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில் பும்ரா இல்லாததால் முஹமது ஷமியுடன் எந்த பவுலர் களமிறங்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆர்ஸ்தீப் vs ஹர்சித் யாருக்கு வாய்ப்பு:

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். இதில் மொத்தமாக அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சித் விக்கெட் எடுத்தாலும் அவர் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சூழலில் டி20 கிரிக்கெட் தவிர்க்க முடியாத வீரராக ஆர்ஸ்தீப் சிங் இருக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆர்ஸ்தீப், ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 9 போட்டிகள் தான் இந்தியாவுக்காக விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் ஆர்ஸ்தீப் சிங் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க கம்பீர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் ஐந்து ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கம்பீர் எடுத்த முடிவு:

மேலும் முகமது சமி தற்போது முழு உடல் தகுதியை பெற்று இருப்பதால் அவர் பிளேயிங் லெவனில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார்.இதனால் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ரானா என இரண்டு பேரில் யாருக்கு வாய்ப்பு என்ற் கேள்வி எழுந்த நிலையில் தற்போது ஆர்ஸ்தீப் சிங்கிற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஹர்சித் ரானா இந்த சீசனில் நன்றாக செயல்பட்டாலும் திறமை அடிப்படையில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாகத்தான் ஆர்ஸ்தீப் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் முஹம்மது ஷமி, ஆர்ஸ்தீப் சிங் ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக களம் இறங்க உள்ளது.

- Advertisement -
Published by