பதிராணா குறித்த தோனியின் பார்வைக்கு மலிங்கா எதிர்ப்பு…சமீந்தா வாஸ் தந்த தரமான பதிலடி

0
32406

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை கற்று அறிந்தவர். தோனியிடம் ஏதேனும் ஒரு வீரர் வந்தால், அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லக்கூடிய ஏணி போல்  செயல்படுவார்.

மற்ற அணிகளில் விளையாடும்போது வீரர்கள் எல்லாம் தோனியிடம் வந்த பிறகு சிறப்பாக விளையாடும் மேஜிக் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே வின் விளையாடும் வரும் பதிராணா குறித்து தோனி பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியின் சொத்து என்றும் அவரை டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே கொண்டு செல்லக்கூடாது என்றும் தோனி கூறியிருந்தார். பதிராணாவை வெள்ளை நிற கிரிக்கெட் பந்து போட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவருக்கு அடிக்கடி ஓய்வு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தோனியின் இந்த பேச்சுக்கு மலிங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதிராணாவை தம்மை விட பெரிய வீரராக மாற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறி இருக்கிறார். முதலில் நான் டெஸ்ட்டில் தான் விளையாடினேன் என்றும் அதன் பிறகு தான் ஒரு நாள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன் என்றும் ஆனால் தம்மிடம் யாரும், டெஸ்டில் விளையாட வேண்டாம் என்று  கூறவில்லை என்றும் மலிங்கா குறிப்பிட்டுள்ளார்.

தான் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டார். அதேபோல் பதிராணாவும் டெஸ்ட் போட்டியும் ஜொலிப்பார் என மலிங்கா தெரிவித்துள்ளார்.  இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் பதிராணாவை பயன்படுத்த தாம் யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மலிங்காவின் இந்த பேச்சுக்கு சமீன்தா வாஸ் தவறு என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி சொன்னதுதான் சரி என்று குறிப்பிட்டுள்ள சமிந்தா வாஸ் பதிராணாவின் பந்துவீச்சு  ஆக்சன் மிகவும் கடினமானது என்றும் அவர் நான்கு ஓவர்கள் வீசினால் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மேல்  ஓவர்களை அவர் வீசினால் கண்டிப்பாக அவருக்கு காயம் ஏற்படும் என்றும், இதனால் பதிராணாவை பாதுகாப்பது அவசியம் என்றும் சமீந்தா வாஸ் வலியுறுத்தி உள்ளார்.