ஐபிஎல்

குடிபோதையில் என்னை சக மும்பை மும்பை வீரர் 15 வது மாடியில் இருந்து தள்ளப் பார்த்தார் – அதிர்ச்சி பேட்டி அளிக்கும் சஹால்

இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் தொடரில் முதல் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார். 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் மும்பை அணியிலும், அதன் பின்னர் 2014 முதல் கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடினார்.

- Advertisement -

சுமார் எட்டு ஆண்டுகளாக பெங்களூரு அணியில் விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் களமிறங்கி விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த முடிந்த மெகா ஏலத்தில் 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 3 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சஹால்

ராஜஸ்தான் ராயல்ஸ் கேம்ப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், கருண் நாயர் மற்றும் சஹால் ஆகியோர் இணைந்து தன்னுடைய பழைய விஷயங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

அதில் சஹால் தன்னுடைய கசப்பான நினைவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.”இந்த விஷயம் அவ்வளவாக அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தற்பொழுது இதை நான் பகிர்கிறேன். 2013ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் இருந்தபோது ஒருமுறை பெங்களூருவில் போட்டி வந்தது. போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு வீரர் ஒருவர் நன்றாக மது அருந்தியிருந்தார்.

- Advertisement -

அவருடைய பெயரை நான் தற்பொழுது வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. அந்த வீரர் நல்ல குடிபோதையில் இருந்தார். என்னை 15 வது மாடிக்கு அழைத்துச் சென்று அங்கே பால்கனியில் நிற்க வைத்தார். நாங்கள் இருவரும் அங்கு நின்று கொண்டிருந்தோம். அவரை அணைத்தபடி என்னுடைய கைப்பிடி நல்ல கெட்டியாக இருந்தது. இருவரும் அங்கு நின்று கொண்டிருக்கையில், எனது கைப்பிடியை நான் சற்று இழந்ததும் பயத்தில் திடீரென மயக்கமடைந்து விட்டேன்.

பின்னர் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்திலிருந்து தெளிய வைத்தனர். அன்று நான் கீழே விழுந்து இருந்தால் அவ்வளவு தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அது. அதிலிருந்து நாம் எப்பொழுது எங்கே யாருடன் சென்றாலும் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று கூறினார்.

சஹால் கூறிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்று சமூக வலைதளத்தில் பரவலாக புரளி எழுந்து வந்தது. ஆனால் சைமன்ஸ் 2011 ஆம் ஆண்டு மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார். சஹால் கூறிய சம்பவம் 2013 ஆம் ஆண்டு நடந்தது. எனவே சஹால் கூறிய வீரர் நிச்சயமாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிடையாது. இதை ரசிகர் ஒருவர் தனது கமெண்ட் மூலமாக புரிய வைத்தார்.

Published by