சாஹலின் ஹாட்ரிக் வாய்ப்பை உறுதிப்படுத்திய ஜோஸ் பட்லர் ; தவற விட்ட கருண் நாயர் – ஏமாற்றமடைந்த சாஹல்

0
186
Chahal and Karun Nair

ஐ.பி.எல்-ன் டபுள் ஹெட்டர் போட்டியில் இன்று முதலில் டி.ஒய் பாட்டில் மைதானத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடதி வருகின்றது.

டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் ராஜஸ்தான் பேட்டிங் செய்ய அழைக்க, ஜெய்ஸ்வாலும், படிக்கல்லும் ஏமாற்றம் அளித்தாலும், ஒருமுனையில் நின்று ஆடிய ஜோஸ் பட்லர் ஐ.பி,எல்-ல் தன் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் நல்ல 30+ ரன் பங்களிப்பை தர, ராஜஸ்தான் அணி சவாலான இலக்கு 193 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்பு 194 என்ற கடின இலக்கோடு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித்தும், அன்மோல் ப்ரீத்சிங்கும் ஏமாற்றம் அளிக்க, ஆனால் இஷான்-திலக் ஜோடி அதிரடியாக விளையாடி மும்பையை மீட்டு ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. பவுல்ட், அஷ்வின் இருவரும் இஷானையும், திலக்கையும் வெளியேற்ற, ஆட்டம் பரப்பரப்பானது.

முதல் மூன்று ஓவரில் ஓவருக்கு எட்டு ரன்கள் வீதம் விட்டுதந்த சாஹல் வீசிய 16 வது ஓவர் ஆட்டத்தை மொத்தமாய் ராஜஸ்தான் பக்கம் கொண்டுவந்துவிட்டதாகவே கூறலாம். முதல் பந்தில் டிம்டேவிட்டே எல்.பி.டபிள்யூ முறையிலும், இரண்டாவது பந்தில் டேனியல் சாம்ஸை ஜோஸ் பட்லரிடம் கேட்ச்சாக செய்தும் ஹாட்ரிக் வாய்ப்பை உருவாக்கினார். ஹாட்ரிக் பந்தை சந்திக்க வந்த முருகன் அஷ்வின் மிடில்-ஸ்டம்ப் லைனில் வைத்த பந்து, அவரது பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற கருண் நாயர் கைகளுக்குப் போக, சுலபமான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் கருண்நாயர்.

பிடித்திருந்தால் இந்த வருட ஐ.பி.எல்-ன் முதல் ஹாட்ரிக்காய் இருந்திருக்கும். இந்ள வருட முதல் ஐ.பி.எல் சதத்தை இதே ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -