100 மீட்டருக்கு மேல் சிக்ஸர் அடித்தால் 8 ரன்கள் வழங்க வேண்டும் என்ற ஆகாஷ் சோப்ராவின் டுவீட்டிற்கு நக்கலான பதில் அளித்த சாஹல்

0
97
Yuzvendra Chahal and Aakash Chopra

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒருபுறம் சில திருப்பங்களோடு நகர்ந்துகொண்டிருக்க, அணிகள், வீரர்கள், கேப்டன்களின் மீதான முன்னாள் வீரர்களின் பாராட்டுகள், விமர்சனங்கள் என்று ஐ.பி.எல் வெளிக்களமும் சூடு பிடித்திருக்கிறது.

இதன் எந்தத் தீவிரத்திற்குள்ளும் விழாமல் எதையும் நகைச்சுவையோடு அணுகி, எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாது, ஐ.பி.எல் போட்டிகளை அனுபவிக்கக்கூடிய ஒரு தனி இரசிகர் கூட்டம் சமூக வலைத்தளத்தில் உண்டு.

- Advertisement -

இப்படியான இரசிகர்போலவே கிரிக்கெட் களத்தில் உள்ளும் வெளியேயும் ஒரு முன்னணி வீரர் இருக்கிறார் என்றால் அது பெங்களூர் அணியிலிருந்து தற்போது ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டிருக்கும், இந்திய அணியின் முன்னணி வீரர் லெக்-ஸ்பின்னல் யுஸ்வேந்திர சாஹல்தான்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது கிரிக்கெட் விமர்சகருமாக செயல்படுகிற ஆகாஷ் சோப்ரா தன் ட்விட்டர் பக்கத்தில், 100 மீட்டர் சிக்ஸருக்கு எட்டு ரன்கள் வழங்க வேண்டுமென்று வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டில் நுழைந்த யுஸ்வேந்திர சஹல் “மூன்று டாட் பந்துகளுக்கு ஒரு விக்கெட் அண்ணா” என்று நகைச்சுவையாக ஆனால் சிறப்பான ஒரு கமெண்ட் செய்திருக்கிறார். ஏனென்றால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாய் இருக்க, ஆகாஷ் சோப்ராவின் இப்படியான ட்வீட்டிற்கு சஹலின் மறு ட்வீட் நகைச்சுவையானது மட்டுமே இல்ல!

- Advertisement -

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்திய அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா சஹலின் ட்வீட்டிற்கு ஹாஹாஹா என மறு ட்வீட் செய்திருக்கிறார்!