சிசிஎல் 2024.. பஞ்சாப் அணியுடன் மோதும் சென்னை ரைனோஸ்.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விபரம்

0
9663

திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்குபெறும் சிசிஎல் என்று அழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் பத்தாவது தொடரானது ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜா மைதானத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கு பெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் பிரபலங்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தொடராக மட்டுமல்லாமல், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய பொழுது போக்காக அமைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இதற்குத் தங்களது ஆதரவை அளித்து வருகிறது.

- Advertisement -

மொத்தம் 20 ஆட்டங்கள் நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மும்பை மற்றும் கேரளா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணியை வீழ்த்தியுள்ளது.

இத்தொடரின் முக்கியமான போட்டியாக கருதப்படும் சென்னை ரைனோஸ் மற்றும் பஞ்சாப் டி செர் அணிகள் மோதும் போட்டி நாளை மதியம் 2:30 மணியளவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கான நேரலையை ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக கண்டுகளிக்கலாம். இது மட்டுமல்லாமல் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் இப்போட்டியை கண்டு களிக்க முடியும்.

இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக நடிகர் ஆர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் திறமை கொண்டவர்கள் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் விக்ராந்தின் பேட்டிங் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் பேட்டிங் யுக்தியைப் போன்று துல்லியமாக இருந்து வருகிறது.

- Advertisement -

எனவே அவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து மற்ற வீரர்கள் விளையாடும் பட்சத்தில் சென்னை அணிக்கு வெற்றிகள் எளிதாக அமையும். மேலும் பஞ்சாப் அணிக்கு சோனு சூட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே இரு பலமான அணிகள் மோதும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப் போட்டிக்கான இரு அணி வீரர்களைப் பற்றி காணலாம்.

பஞ்சாப் டி ஷேர்: சோனு சூட் (கேப்டன்), ஜிம்மி ஷெர்கில், ஆயுஷ்மான் குர்ரானா, குர்பிரீத் குக்கி, பின்னு தில்லான், ஜாஸ்ஸி கில், ராகுல் தேவ், கேவி சாஹல், தேவ் கரூத், குல்சார் சாஹர், பப்பல் ராய், ஆர்யமான் சப்ரு, நவ்ராஜ் ஹன்ஸ், யுவராஜ் ஹன்ஸ், யுவராஜ் ஹன்ஸ், தேவ், அர்ஜன் பஜ்வா, ஹர்மீத் சிங்.

சென்னை ரைனோஸ்:

ஆர்யா (கேப்டன்), விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிருதிவி, அசோக் செல்வன், கலை அரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன்.