2வது தென்ஆப்பிரிக்கா டெஸ்ட்டில் விராட் கோலி விளையாடாத காரணம் இதுதான் – கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்

0
172
Virat Kohli and KL Rahul

அனைவரும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்காவுக்கு அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி சில நிமிடங்களுக்கு முன்னர் தொடங்கியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடும். இது மட்டும் நிகழ்ந்தால் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாக அமையும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி பெற்று, அந்த வரலாற்றுச் சாதனையையும் படைக்கும் என்று அனைத்து இந்திய ரசிகர்களும் இந்த டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்திருந்தனர். விராட் கோலியும் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் போட்டிக்கு முன்பாக பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை அடுக்கடுக்காக வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று போட்டியில் டாஸ் நேரத்தில், விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்காத காரணம் இதுதான்

விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போன செய்தி அனைத்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது சம்பந்தமாக நேற்று தனது பிரத்தியேக பேட்டியில் கூட எதுவும் சொல்லாத நிலையில் ஏன் இந்த முடிவு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கான பதிலை கேஎல் ராகுல் டாஸ் நேரத்தில் கூறினார். போட்டி துவங்க சில மணிநேரங்களுக்கு முன்பு விராட் கோலிக்கு மேல் முதுகு பகுதியில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாகவே அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. பிசியோதெரபிஸ்ட் வல்லுநர்கள் அவருக்கு உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு வருகின்றனர். நிச்சயமாக இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட தயாராகி விடுவார் என்று நம்பிக்கையாக கே எல் ராகுல் விளக்கம் அளித்தார்.

இது எனக்கு பெருமையான ஒரு உணர்வு

இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியை வழிநடத்துவது உறுதி எப்படி உணர்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்திய அணியை தென்னாப்பிரிக்க மண்ணில் வழி நடத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது மிகப் பெருமையாக உள்ளது” என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

- Advertisement -

இங்கு (இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஜோகன்ஸ்பர்க் மைதானம்) இதற்கு முன்னர் ஒரு சில போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்து நிறைய ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணியை நெருக்கடியான நிலையில் தள்ளுவதே தனது யுக்தி என்றும் கூறியுள்ளார்.

தற்பொழுது 14 ஓவர் முடிவில் இந்திய அணி 36 ரன்கள் குவித்து எந்தவித விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் ஓபனிங் வீரர் மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 26 ரன்களும் கேப்டன் கே எல் ராகுல் 49 பந்துகளில் 9 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -