நாளை தொடங்கும் டி20 உலக கோப்பை தொடரில் பேட்டிங் வரிசையில் இஷான் கிஷானுக்கு என்ன இடம் கொடுக்கப்படும் என்பது குறித்து இந்திய கேப்டன் சூரிய குமாரி யாகம் தெரிவித்திருக்கிறார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது.
இஷான் கிஷானுக்கு வாய்ப்பு
நேற்று முன்தினம் நவி மும்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அபிஷேக் சர்மா உடன் இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். மேலும் அந்தப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடி 20 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்.
மேலும் இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் விளையாடுவதற்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பதிலளித்திருக்கிறார்.
இஷானின் இடம் இதுதான்
இதுபற்றி சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “இஷான் கிஷான் கடந்த ஐந்து டி20 போட்டிகளாக மிகவும் அருமையான முறையில் விளையாடியிருக்கிறார். அது சர்வதேசப் போட்டிகள் என்பதால் அவர் மிகச் சிறப்பான முறையில் தன்னை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாகவே விளையாடு இருந்தார். அங்கு விளையாடிய அதே ஆட்டத்தை இங்கும் கொண்டு வந்தார்”
இதையும் படிங்க : 411 ரன்.. U19 உகோ பைனலில் வைபவ் சூரியவன்சி ருத்ர தாண்டவம்.. 80 பந்துகளில் மெகா சாதனைகள் – இந்திய அணி ரன் குவிப்பு
“மூன்றாம் இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் பயிற்சி போட்டியில் தொடக்க வீரராக விளையாடிய போதும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே அவரை நாங்கள் மூன்றாவது இடத்திற்கு கீழே அனுப்ப மாட்டோம். அவருக்கு இடத்தில் எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவர் பயன்படுத்தி விடுவார்” என்று கூறியிருக்கிறார்.






