விராட் கோலி ஆடியதில் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் இது தான் – புதிய டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம்

0
542
Rohit Sharma and Virat Kohli

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோஹித் ஷர்மா & கோ முழுமையாகக் கைபற்றி அசத்தியது. தற்போது அனைவரது கவனமும் மொஹாலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் பக்கம் திரும்பியுள்ளது. மிக முக்கியமான செய்து என்னவென்றால் இது முன்னாள் கேப்டன் கேப்டன் விராட் கோஹ்லியின் 100வது டெஸ்ட் ஆகும். கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது வாழ்த்துகளை விராட் கோஹ்லிக்கு அளித்து வருகின்றனர். இது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தன் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். கோஹ்லியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிப்பது அவருக்கு மட்டுமில்லாமல் அணிக்கும் நற்செய்தி என்று தெரிவித்தார்.

விராட் கோஹ்லி ஆடிய அனைத்து இன்னிங்சில் தனக்குப் பிடித்த இன்னிங்ஸ் குறித்து ரோஹித் ஷர்மா கூறியதாவது, “ 2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மண்ணில் ஸ்டெய்ன், மார்க்கல், காலிஸ்க்கு எதிராக துல்லியமான ஆட்டத்தை வெளிக்காட்டி சதம் விளாசிய விராட் கோஹ்லியின் அந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அடு தவிர்த்து 2018ல் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதமும் பிடிக்கும். ஆனால் மிகவும் பிடித்தது 2013 இன்னிங்ஸ் தான். ”

- Advertisement -

2013ஆம் வருடம் விராட் கோஹ்லியின் அபார ஆட்டத்தைப் பாராட்டாத நபர்களே இல்லை. முதல் இன்னிங்சில் 119 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்களும் விளாசிய கோஹ்லி ஆட்டநாயகன் விருதுப் பெற்றார். போட்டி டிராவில் முடிந்தது. தென்னாபிரிக்காவில் இது போன்ற ஆட்டத்தை ஆட வேண்டுமென்பது அனைத்து இந்திய வீரர்களின் ஏக்கம்.

டெஸ்ட் கேப்டன்சி குறித்து ரோஹித் ஷர்மா

ஒருநாள் மற்றும் டி20 பார்மட் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பும் தற்போது கிடைத்துள்ளது. டெஸ்ட் கேப்டனாக தன் முதல் போட்டியை மார்ச் 4ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ளார். புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோஹித் தெரிவித்துள்ளது, “ என்னுடைய முன்னுரிமை டெஸ்ட் அணியை வழிநடத்துவதே. அதைக் கருத்தில் கொண்டு நான் களமிறங்க உள்ளேன். நிறைய காயங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதனால் இது சுலபமான காரியமாக இருக்கும் என்று எனக்கு தோணவில்லை. ”

புஜாரா & ரஹானேவின் இடத்தை அவ்வளவு எளிதில் நிறப்பிவிட முடியாது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியதில் இருவரும் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். அவர்கள் இந்திய அணிக்கு ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காதவை என்று புகழ்ந்தார்.

- Advertisement -