ஸ்ரேயாஸ் ஐயர்தான் இந்த தொடர்ல ஹீரோ.. அவர் செஞ்ச அந்த வேலைய மட்டும் மறக்க மாட்டேன் – ரோகித் சர்மா நெகிழ்ச்சி

0
603
Rohit

நடந்து முடிந்த சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணிக்கு ஹீரோவாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஸ்ரேயா ஐயரும் அதிக விக்கெட் எடுத்த வீரராக வருண் சக்கரவர்த்தியும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் சீரான செயல்பாடு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

- Advertisement -

எங்களுக்கு அந்த விஷயம் தெரியும்

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்றும், இதில் முக்கிய வீரராக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வாறு செயல்பட்டார் என்பது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பாராட்டி பேசி இருக்கிறார்.

இது குறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது ” இங்கு துபாயில் சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் என்று தெரியம். ஆனால் நாங்கள் சிறப்பாக மாறிக்கொண்டோம். இங்குள்ள ஆடுகளத்தில் 230 ரன்கள்தான் சரியானது என்றும் தெரியும். மேலும் இந்த ஆடுகளம் மெதுவாக இருக்கும். இப்படியான நேரத்தில் எங்களுடைய பேட்ஸ்மேன் சிறப்பான முறையில் விளையாடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதுதான் இங்கு மிகவும் தேவையாக இருந்தது”

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் ஹீரோவாக இருந்தார்

“இந்த தொடர் முழுவதிலும் ஒரு அமைதியான ஹீரோ போல ஸ்ரேயாஸ் ஐயர் இருந்திருக்கிறார். அவர் எங்களுக்கு மிடில் ஆர்டரில் மிகவும் முக்கியமானவர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான செமி பைனலில் அவர் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன் உடனும் பாட்னர்ஷிப் அமைத்தார். குறிப்பாக விராட் கோலி உடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார்”

இதையும் படிங்க : கம்பீர் இந்திய அணி இப்படிதான்.. அழுதுக்கிட்டே இருங்க அதான் எங்களுக்கு வேணும் – கவாஸ்கர் பதிலடி

“மேலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட நான் ஆட்டம் இழந்த பொழுது மூன்று விக்கெட் இழந்து இந்திய அணி சிக்கலில் இருந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு 50 முதல் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அங்கு தேவைப்பட்ட பொழுது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதை செய்தார்கள். நீங்கள் நிலைமைக்கு ஏற்ப சீக்கிரத்தில் மாறும் பொழுது சிறப்பாக எல்லாம் கை கூடி விடுகிறது. இந்த தொடரில் இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் என்னுடைய வேலையை குறைத்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -