தொடரும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் ! அணியில் அவரது இடம் குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டி

0
570
Rohit Sharma and Virat Kohli

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு நடந்த டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இருநாட்டு இரசிகர்களுக்கும் விருந்தாய் அமைந்தது. செளதாம்டன், எட்ஜ்பஸ்டனின் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி 50, 49 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

நேற்று தொடரின் கடைசி மூன்றாவது போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் பார்க்கின்ஸ்டைன், சாம் கரன் நீக்கப்பட்டு, டாப் சிப்லி, பில் சால்ட் சேர்க்கப்பட்டார்கள். இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருந்ததால் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றினாலும் டேவிட் மலானின் அதிரடி அரை சதமும், லியாம் லிவிங்ஸ்டனின் இறுதிகட்ட அதிரடியும் இங்கிலாந்து அணியை இருபது ஓவர்கள் முடிவில் 215 ரன்களை குவிக்க வைத்தது.

பெரிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 1, விராட்கோலி 11, ரோகித் சர்மா 11 என சீக்கிரத்தில் வெளியேறினாலும், சூர்யகுமார் யாதவ் அற்புதமாக விளையாடி 55 பந்துகளில் 117 ரன்கள் குவிக்க, வெற்றியை நெருங்கி 198 ரன்கள் எடுத்து இந்திய தோற்றது.

ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலிக்கு டி20 அணியில் இடம் தருவது பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அதற்கு அவர் பல விசயங்களை வெளிப்படையாகப் பேசினார். அணியின் திட்டம், நகர்வு பற்றி கூறியதோடு, இந்த மாதிரியான கேள்விகள் இனி கேட்க முடியாதபடி அவரது பதில் இருந்தது.

- Advertisement -

ரோகித் சர்மா பேசியதாவது; “அணியில் வீரர்களின் இடம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் வல்லுனர்கள் யாரென்று தெரியவில்லை. வீரர்களின் தரத்தை பார்த்துதான் நாங்கள் முடிவெடுக்கிறோம். ஒரு வீரர் (விராட் கோலி) கடந்த பத்தாண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், நாங்கள் அவரின் தற்போதைய சில ஆண்டுகளை மட்டும் பார்க்க முடியாது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “அணிக்குள் என்ன நடக்கிறதென்று வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு சிந்தனையைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஒரு அணியை உருவாக்குகிறோம். அதற்குப் பின்னால் நாங்கள் நிறைய கலந்து ஆலோசிக்கிறோம். எது நடந்தாலம் நாங்கள் வீரர்களைத் தொடர்ந்து ஆதரிக்கறோம். வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை. அணிக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு வீரரின் செயல்பாட்டு திறன் ஏறும் இறங்கும். ஆனால் அவரின் தரம் என்பது நிரந்தரம். நாங்கள் ஒரு வீரரின் தரத்தைத்தான் பார்க்கிறோம். ஒரு வீரரைப் பற்றிக் கருத்துக் கூறும் முன் இது புரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரரின் முக்கியத்துவத்தையும் நாங்கள் அறிவோம்” என்று கூறியிருக்கிறார்!