உலக கிரிக்கெட்

வேதனையா இருக்கு.. 2 விஷயங்கள் ஜாயிண்ட் ஆகாம போயிடுச்சு.. எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கல – கம்மின்ஸ் வருத்தம்

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு பேட் கம்மின்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை கேப்டனாக இருந்து வென்று கொடுத்திருக்கிறார். இதுவரையில் ஐசிசி தொடர்களில் இறுதி போட்டியில் தோல்வியடையாத கேப்டனாக இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெருமை உடைந்திருக்கிறது.

ஆஸ்திரேலியா அணியின் துரதிஷ்டம்

இந்த போட்டி நடைபெற்ற முதல் இரண்டு நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த காரணத்தினால் ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு நாட்களில் 17 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸ் விளையாடி இழந்தது. இதுவே அந்த அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மூன்றாவது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டிங் செய்த சாதகமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்பொழுது “விஷயங்கள் எப்பொழுதும் வேகமாக மாறிக்கொண்டே இருக்கும். எங்களால் இந்த முறை துரதிஷ்டவசமாக இதை கடந்து செல்ல முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து முன்னிலை பெற்றோம். அடுத்து அவர்களை சீக்கிரத்தில் ஆல் அவுட் செய்து வெல்ல முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை”

- Advertisement -

தோல்விக்கு முக்கிய காரணம்

“நாங்கள் எதிர்பார்த்ததை விட விக்கெட் சீக்கிரமாக பேட்டிங் செய்ய சாதகமாக மாறிவிட்டது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் கண்டிஷன் இப்படித்தான் அடிக்கடி மாறும். நாம் இதை ஒரு விஷயமாக சொல்ல முடியாது. நம்முடைய திட்டங்கள், செயல்பாடுகள் இரண்டு விஷயங்களும் ஒன்றாக இணைய வேண்டும். கடந்த இரண்டு வருடமாக எங்களுக்கு மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் இந்த முறை எங்களால் இதை இணைக்க முடியவில்லை”

இதையும் படிங்க : மன வேதனை ஏமாற்றத்தை தாண்டி வந்தோம்.. எனக்கு புள்ளி விபரங்களை விட இதுதான் வேணும் – டெம்பா பவுமா பேட்டி

“நாதன் லயன் பந்துவீச்சு அச்சுறுத்தல் தரும்படி இருந்தது. ஆனால் அவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. சில நேரங்களில் இப்படி நடக்கும். அதே சமயத்தில் மார்க்ரம் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு தங்களை தகுதியானவர்களாக வைத்து வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள். நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறேன். கிரிக்கெட்டின் உச்சம் இதுதான். இது நல்ல ஒரு நிகழ்வாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Pat Cummins

Recent Posts