நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ரண்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவை கேப்டன் கேஎல்.ராகுல் கோபப்பட்டு பேசிய வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணி மூன்று போர்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கனுக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் நல்ல ரன் குவித்தோம் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை கைப்பற்ற முடியாதது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மொத்தம் 8.2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 85 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அவர் வாரி வழங்கியிருக்கிறார். அதே சமயத்தில் அவர் இரண்டு விக்கெட்டுகளும் நேற்று கைப்பற்றி இருந்தார். அதனால் இந்திய அணிக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை.
இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா தொடர்ந்து நிறைய ஷார்ட் பந்துகளை வீசினார். அந்தப் பந்துகளை அவர் தவறான லைனில் வீசினார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் சுலபமாக சிக்ஸர்கள் பவுண்டரிகள் அடித்தார்கள். இதனால் கேப்டன் கேஎல்.ராகுல் ஷார்ட் பந்தை வீச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் பிரசித் கிருஷ்ணா தொடர்ந்து அப்படியே வீச கேப்டன் கேஎல்.ராகுல் கோபமடைந்திருக்கிறார்.
பிரசித் கிருஷ்ணாவிடம் கோபமாக பேசிய கேஎல்.ராகுல் “பிரசித் நீ உன் மூளையை பயன்படுத்தி வேலை செய்யாதே. நான் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என உனக்கு சொல்லிவிட்டேன். நான் சொன்ன இடத்தில் நீ பந்து வீசு. நீ அதை செய். பேட்ஸ்மேன் தலைக்கு பந்து வீசாதே”
இதையும் படிங்க: 95 ஓவர்.. வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்த ரச்சின் ரவீந்தரா.. நியூசிலாந்து முதல் டெஸ்டில் அபாரம்
“பிரசித் இப்பொழுதுதான் நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நீங்கள் மீண்டும் பேட்ஸ்மேன் தலைக்கு பந்து வீசிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன ப்ரோ இது!” என மிகவும் கோபமாகவும் சலிப்பாகவும் கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்.