யாரையும் எதுவும் சொல்ல முடியாது இந்த தோல்விக்கு நானே பொறுப்பு ஏத்துக்கிறேன் – ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

0
3392

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது எல்லா அணிகளும் பாதி போட்டிக்கு மேல் விளையாடிய நிலையில் இனி அவர்கள் விளையாடப் போகும்போது போட்டிகளும் அந்த அணிகளின் பிளே ஆப் தகுதிக்கான நகர்வாகவே அமையும்.

இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி இறுதி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்றது. இரண்டு ஓவர்களுக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போட்டியை ராகுல் தேவாட்டியா தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் 6 பந்துகளுக்கு 12 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

- Advertisement -

ஆனால் டெல்லி மற்றும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சால் இறுதி ஓவரில் குஜராத் பணியால் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குஜராத் அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் பிரியா சுற்றுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. இனிவரும் ஒவ்வொரு போட்டிகளிலும் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வந்த குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை தங்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தினர் டெல்லி அணியினர் வழக்கமான போட்டிகளை விட இன்றைய ஆட்டத்தில் அவர்களிடம் ஒரு உத்வேகம் இருந்தது.

போட்டிக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா” 130 ரன்கள் என்பது எந்த நாளிலும் சர்வசாதாரணமாக அடிக்கக்கூடிய ஒரு இலக்கு. ஆரம்பத்தில் விழுந்த விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இருந்தாலும் ராகுலின் அபாரமான ஆட்டத்தால் நாங்கள் மீண்டும் போட்டிக்குள் வந்தோம். அவர்களின் மிகச் சிறப்பான பந்துவீச்சால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனை என்னுடைய தோல்வியாகவே பார்க்கிறேன். ஒரு கேப்டனாக நான் இந்த ஆட்டத்தை வெற்றியோடு முடித்திருக்க வேண்டும். இந்த தோல்வி என்னால்தான் வந்தது. என்னால் இந்த ஆட்டத்தை முடிக்க முடியவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “முகம்மது சமியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் டெல்லி அணியை எளிதான இலக்கிற்குள் கட்டுப்படுத்தினோம். அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் வீசி அற்புதமான பந்துவீச்சிருக்கு நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இந்தத் தொடரில் இன்னும் நிறைய ஆட்டங்கள் மீதம் இருக்கின்றன. நாங்கள் முதலிடத்தில் தான் இருக்கிறோம். இந்தப் போட்டியில் கிடைத்த படிப்பினைகளைக் கொண்டு தொடர்ந்து முன்னேறுவோம். இந்தப் போட்டி எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம் அதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறப்பும்சம். இன்னும் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை ஆட வேண்டும்” என்று கூறி முடித்தார்,