கெத்தாக சதமடித்து ஆட்டத்தை கேமரூன் கிரீன்.. ஃபார்முக்கு வந்த ஹிட்மேன்… மும்பை அணி அபார வெற்றி! – பிளே-ஆப் சுற்றுக்கு போக இனி என்ன செய்யவேண்டும்?

0
533

கேமரூன் கிரீன் அசத்தல் சதம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 18 ஓவர்களில் கெத்தாக வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. பிளே-ஆப் செல்ல இனி செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணிக்கு ஓப்பனிங் இறங்கிய விவ்ராந்த் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் சேர்த்தனர்.

விவ்ராந்த் 69 ரன்கள், மயங்க் அகர்வால் 83 ரன்கள் விளாசினார். பின்னர் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் சற்று தடுமாற்றத்துடன் விளையாட 220 ரன்கள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை அடித்தது.

ஏற்கனவே இந்த மைதானத்தில் இரண்டு முறை 200 ரன்களை சேஸ் செய்த அனுபவத்துடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிசன் 14 ரண்களுக்கு அவுட் ஆனார். மீண்டும் ஃபார்மிற்கு வந்த ரோகித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இவருடன் பக்கபலமாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் மறுபக்கம் அரைசதம் அடித்தார். அடுத்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் தனது ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். மற்றொரு பக்கம் அரைசதம் கடந்து இன்னும் அதிரடியாக விளையாடி வந்தார். கேமரூன் கிரீன்.

சூரியகுமார், ஆங்காங்கே ஓரிரு பவுண்டரிகள் அடித்து, முழுமையாக கேமரூன் கிரீன்-க்கு ஸ்ட்ரைக் கொடுக்க, வெளுத்து வாங்கிய கிரீன், 18ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் அடித்து டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி 100 ரன்களுக்கு இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். சூரியகுமார் 25 ரன்களில் இருந்தார்.

இறுதியாக 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகும் 16 புள்ளிகளில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே-ஆப் சுற்றின் இடம் இன்னும் உறுதியாகவில்லை. அடுத்ததாக நடைபெற உள்ள ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றி-தோல்வி பொறுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு உறுதியாகும்.